பக்கம்:நாகப்பட்டினம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை - 145

சோலை ஊரமைப்பு $

புதுமைக்கால அறிவார்ந்த நகரமைப்புக் கருத்துக்களில் சோலை ஊரமைப்பு முதன்மையானது; மூலமானது. இது தமிழ் மண்ணில் முற்காலச் சான்றோரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திவாகர நிகண்டு என்னும் நூல் இச் சோலை ஊரமைப்பை எடுத்து மொழிந்துள்ளது: 3.

"சுரந்த நீரும் வயலும் சூழ்ந்த ஊர் கிராம மாகக் கிளக்கப் படுமே" (13) ~ இந்நூல் 11 ஆம் நூற்றாண்டு நூலாயினும் சொற்களஞ்சியமாகிய இந்நூலில் தொன்மைக் கால வழக்குகளும் நடப்புகளுமே சுட்டப்படும். இவ்வூரமைப்பை மக்கள் தொகையாலும் வரையறுத்தனர்.

"நூறு குடும்பங்களைக் கொண்டது சிற்றுார் ஐநூறு குடும்பங்களைக் கொண்டது பேரூர்" (14) - என்று சூடாமணி நிகண்டு ஒர் மக்கள்தொகை எல்லை கூறியுள்ளது.

இவ்வகையான சிற்றுார். பேரூர் நிலையை நாகை நகரம் முன் காலக்கட்டங்களிலேயே கண்டது. இவற்றில் வளர்ச்சியாக நகரம் உருவாயிற்று.

"வடிவுடை இராசதானி, மணிமதிற் கோபுரங்கள்

புடைபடும் அகழாற் சூழ்ந்த புரம், புரி நகரமும் பேர்" (1.5) - என்னும் சூடாமணி நிகண்டுப் பாடல் 'நகரம்' என்னும் பெயர் பெறுவதற்குரிய அமைப்பைக் கூறியுள்ளது.

தாமரை நகரமைப்பு

இவ்வகை நகர்மைப்பை நம் சங்க காலப் பாடல்கள் அறிவித் துள்ளன. தமிழகத்து முற்கால இடைக்கால் நகர்களில் கச்சி என்னும் 'காஞ்சிபுரமும் மதுரை மாநகரமும் உள்ளது உள்ளபடி விளக்கப் பெற்றுள்ளன.

கச்சி சிறந்த நகரம் என்னும் உண்மையை அழகுமுத்துப்புலவர் "எத்தனை நகர் ஒரு காஞ்சியாமோ (16) என்று பாடினார். இத்தகைய காஞ்சியின் நகரமைப்பைக் காட்டும் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

"நீலநிற உடம்பையுடைய திருமாலின் கொப்பூழில் (உந்தியில்) தோன்றிய தாமரையின் ாே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/163&oldid=585044" இலிருந்து மீள்விக்கப்பட்டது