பக்கம்:நாகப்பட்டினம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 147

முறையே. இதனை ஈ.பி ஆவெல் (E.B.Hawel) என்னும் நகரமைப்பு அறிஞர்,

"இந்தியச் சோலைச் சிற்றுார் அமைப்புத் திட்டத்தை அடிப் படையாகக் கொண்ட சோலை நகர அமைப்பை ஐரோப்பிய அறிவியலார் ஆராய்ந்து முன்னேற்றமடையவில்லை" என்று சுட்டிக் காட்டியுள்ளார். -

ஐரோப்பியரின் இக்குறைக்குக் காரணம் அங்கு கோயிலை மையமாகக் கொண்டு நகர் அமையாமையேயாகும்.

நாகையில் கரோணராம் பாசுபதத்தாரால் எழுந்த கோயிலைச் சுற்றி, பின்னர், ஆட்சி கொண்ட சோழரும், நாயக்கரும் நகர்ச் செல்வரும் திருச்சுற்றுகளையும் ஆகம முறைப்படிக் கருவறை, மேற்கூரையாம் விமானம், பல்வகை முறையான மண்டபங்கள், வாயில் கோபுர அடித்தளம் முதலியவற்றையும் பெருக்கினர். உள்ளே ஒரு குளமும் அமைந்தது.

வெளிச்சுற்றின் புறத்தே கோயில் பணியாளரும் பார்ப்பனரும் பூசெய்ப் பணிபுரியும் குருக்கள்களும், பிற பார்ப்பனரும் அமைந்த குடியிருப்புகள் அமைந்தன. இவற்றிற்கும் புறத்தே நான்கு பெருவீதிகள் அமைந்து அவற்றில் செல்வர், வணிகர், கலைஞர், கற்றோர் வளமனைகளும், மாளிகைகளும் எழுந்தன. இவ்வீதிகள் பிற்காலத்தே அம்மையின் பெயரால் நீலா கிழக்கு தெற்கு மேற்கு, வடக்கு எனப் பெயர் கொண்டன.

நாகையை நேரில் கண்டு பாடிய திருஞானசம்பந்தர், "மண் ஆர் முழவு ஒவா மாடம் நெடுவீதிக் கண்ஆர் கடல் நாகை" என்றும்; சுந்தரர், "காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதி கடல் நாகை" என்றும் பாடியுள்ளமை இங்கு கருதத்தக்கவை. மையக் கரோணர் கோயில் நகரமைப்பிற் கண்டவாறு தாமரைப் பொகுட்டாகவும் மற்றவை மற்ற அமைப்புகளாகவும் அமைய நாகை ஒரு நிறை நகரமாகியது. சீனக் கோபுரம்

இக்காலத்தில் புத்த வளாகமும் ஆக்கம் கொண்டது. முன்னர் சமயங்களின் துணைக்காக அமைந்த ஒளிதரும் கோபுரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/165&oldid=585046" இலிருந்து மீள்விக்கப்பட்டது