பக்கம்:நாகப்பட்டினம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நாகபட்டினம்

பழுதுற்றதால் புதுக்கோபுரம் வேண்டிய சூழல் நேர்ந்தது போலும், சீனர்களின் வருகை பெருகியதால் அக்காலச் சீன மன்னன் நாகையில் நாட்டம் வைத்தான். அவனது சீனமொழிக் கல்வெட் டொன்று இங்கு இருந்ததை தாவோ - சி லியோ என்னும் சினநூல் கூறுகிறது. இம்மன்னனும் இரண்டாம் நரசிம்ம வர்மனாம் பல்லவ மன்னனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். சீன மன்னன் வேண்டியதற்கு இணங்கி நரசிம்மவர்மன் புதிதாக ஒரு கோபுரத்தை எழுப்பி வழங்கினான். இது அந்நகரின் வெளியில் புத்த வளாகத் தில் எழுந்ததால் வெளிக்கோபுரம் எனப்பட்டது. முன்னொரு கோபுரம் இருந்தமையால் இது புது வெளிக்கோபுரம் எனப் பெயர் பெற்றது. இது ஐந்தடுக்கு மாடங்களைக் கொண்டது. இதனைச் சீன பகோடா (Chinese Pagoda) என்றும் வழங்கினர். ஒல்லாந்தர் உடன்படிக்கைச் செப்பேட்டில் இப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளது.

படேவியா வெள்ளிப்பட்டயம் இதனை,

"நாகப்பட்டணத்து ...............ه » ه . » هه ۰، ۰، ۰، ه ۰ - ۰ - ۰ ء » ه می

l-Hājj வெளிக்கோபுரத்திற்கு மேல்புறமாய் இருக்கிற தோட்டமும்"(20) என்று குறிக்கிறது.

இப்புது வெளிக்கோபுர அமைப்புடன் நாகை நகரம் ஒரு குறிப்பிடத்தக்க தோட்டத்தையும் பெற்றிருந்தது. உடன்படிக்கையில் குறிப்பிடப்படுவதால் இத்தோட்டம் நல்ல வருவாய் தருகிற மர இனங்களையும் பசுமைத் தாவரங்களையும் கொண்டமைந்ததாகக் கொள்ள வேண்டும். இதன் அண்மையில் கிழக்கே நிலவறை கொண்ட ஒரு கட்டடம் எழுந்தது. இக்கோபுர அமைப்பு நாகைக்கு ஒரு சிறப்பான அமைப்பாயிற்று. புத்தச் சின்னங்கள் யாவும் சிதைவுற்றும், சிதைக்கப்பட்டும் அழிந்த காலத்திலும் இப்புது வெளிக் கோபுரம் ஒன்றே ஒரு தடயமாக இருந்தது. நகர் வகை மூன்று

இவை அனைத்தையும் ஒன்று கூட்டி நோக்கினால் பிற்காலத்தே,

............. பயில் புற நகரம் என்றும் நிகர் இடை நகரம் என்றும் நிலவும் உள் நகரம் என்றும் புகளிலோர் மூன்று உண்டு (21) என்று பிள்ளையவர்கள்

பாடுவதற்கிணங்க மூவகை அமைப்புகளை நாகை கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/166&oldid=585047" இலிருந்து மீள்விக்கப்பட்டது