பக்கம்:நாகப்பட்டினம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50 நாகபட்டினம்

குறிப்பிடத்தக்கது சூளாமணி விகாரை அறக்கட்டளையாகிய 'ஆனைமங்கலம் செப்பேடு காட்டுவதாகும்.

சாவகர்க்கு விகாரை

இச்செப்பேடு நாகையில் எழுப்பப்பெற சூளாமணி விகாரைக்கு மன்னன் இராசராசன் பள்ளிச் சந்தமாக ஆனைமங்கலம் என்ற சிற்றுாரின் பல்வகை வருவாய் வழங்கிய அறக்கட்டளையின் பதிவு ஆகும். இது பதினோராம் நூற்றாண்டில் இராசராசனின் ஆட்சி ஆண்டு 21 இல் அதாவது கி.பி. 1005இல் நிகழ்ந்தது.

இக்காலத்திற்கு (1993) 1036 ஆண்டுகளுக்கு முன் அசோகப் பெருமன்னன் நாகையில் ஆதிவிகாரை கட்டினான். அஃது ஏறத்தாழ 700 ஆண்டுகள் பயன்பட்டது. பின் சிதையாமல் என்ன ஆகும்: அதனால் ஐந்தாம் நூற்றாண்டில் நாகானன விகாரை எழுந்தது. அது 600 ஆண்டுகளாகப் பயன்பட்டது. சிதையாமல் என்ன ஆகும்: எனவே புதிதாக ஒரு விகாரை வேண்டும் சூழல் நேர்வது இயல்பே.

கடார நாட்டு மன்னன் சைலேந்திர குலத்தினனான சிரி விசய சூளாமணி வர்மன் நாகையில் வணிகத் தொடர்பு கொண்டிருந் தான். அவன் புது புத்த விகாரை ஒன்றை எழுப்ப விரும்பினான். இராசராசப் பெருமன்னனின் துணையும் கிடைத்தது. பணிகளைத் தொடங்கினான். இடையில் அவன் புகழுடம்பெய்தவே அவன் மகன் சிரீவிசய விசயோத்துங்க வர்மன் அப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றி அதற்குத் தன் தந்தை நினைவாகச் சூளாமணி விகாரை என்று பெயரிட்டான். உலகத் திலகம்

இதன் அமைப்பையும் சிறப்பையும் ஆனைமங்கலம் செப்பேடு இவ்வாறு காட்டுகிறது:

"சத்திரிய சிகாமணி வளநாட்டின் பட்டினக் கூற்றத்தில் உலகத்திற்குத் திலகம் போன்ற நாகப்பட்டினத்தில் தன் உயரத்திற்கு பொன் மலையையும் சிறியதாகக் காட்டி தன்.அழகினால் வியப்படையச்செய்கின்ற சூளாமணி

- விகாரை".

1. பள்ளிச் சந்தம் = புத்த சமணப் பள்ளிகளுக்கு வரியில்லாத நிலக்கொடையாக மன்னரால் வழங்கப்படுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/168&oldid=585049" இலிருந்து மீள்விக்கப்பட்டது