பக்கம்:நாகப்பட்டினம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை | 5 ||

இவ்விகாரை அமைப்பால் நாகபட்டினம் ஒரு தனிச்சிறப்பை இணைத்துக் கொண்டது. நகரத்தே ஒரு தனி அழகாக இவ்விகாரை அமைந்தது. அத்துடன் இவ்விகாரையின் இணைப்பாக இராசேந் திரனால் கட்டப்பெற்ற இரண்டு பள்ளிகள் (பயிலும், துயிலும் இடம்) இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திரப் பெரும்பள்ளிகள் சிறப்பைப் பெருக்கின.

முதற் குலோத்துங்கன் காலத்தில் மீண்டும் உறுதி செய்து பதியப்பெற்ற செப்பேடாகிய ஆனைமங்கலம் சிறிய செப்பேட்டில் சூளாமணி விகாரை அமைந்த புத்த வளாகப் பரப்பின் நான்கெல்லைகள் வரையறுத்துக் குறிக்கப்பட்டுள்ளன.

அன்றைய வளாகம் இன்றையப் படத்தில்

அதன்படி வளாகப் பரப்பு இன்றைய அமைப்புடன் கீழ்வரு மாறு அமையும். ஆனைமங்கலம் சிறிய செப்பேட்டில் உள்ள தொடரும் அதன் பொருள் விளக்கமாக இன்றைய நிலைப் பார்வையும் வருகின்றன.கிழக்கெல்லையிலிருந்து தொடங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/169&oldid=585050" இலிருந்து மீள்விக்கப்பட்டது