பக்கம்:நாகப்பட்டினம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 1 53

(அறிஞர் அண்ணா சிலைப்பகுதி) அதனைத் தொடரும் மேற்கில் ஒரு கிணறு புகையுண்ணிக்கிணறு என்ற பெயரில் இருந்தது. இரண்டு, அதனைத் தொடர்ந்து மேற்காக இருந்த நிலப்பகுதி வெளியூர்ச் சிவன் கோவிலுக்குரியது. மூன்று, பரவைக்குள மாராயன்' என்பவன் தோண்டிய (கல்லுவித்த) தாக இப்போது தூய அந்தோனியார் மேனிலைப்பள்ளி வளாகத்தில்) உள்ள குளத்தின் வடகரையில் துவங்கி, சற்று தொலைவு மேற்காகச் செல்லுவதாகிய - இன்றைய சுடுகாட்டுக்குச் செல்லும் தெருவாகும். இதன் வடக்கு புத்தவளாகம்.

செப். தொடர்: வடக்கெல்லை: "மேற்பாற்கெல்லை காரைக்காற்ப் பெருவழிக்குக் கிழக்கும்" பொருள்: மேனிலைப்பள்ளிக் குளத்து வடகரையில் துவங்கிய காரைக்கால் சாலை சற்றுத் தொலைவில் வடக்கே திரும்பி நீள்கிறது. இஃது இப்போது அறமன்றத்துப் பின்புறச் சுற்றுச் சுவரை ஒட்டியுள்ள தெரு. இது மேற்கெல்லை. இதன் கிழக்கு புத்தவளாகம்.

செப். தொடர் மேற்கெல்லை:

"வடபாற்கெல்லை சோழகுலவல்லி பட்டனத்து நிலம் வடகாடம் பாடி எல்லைக்குத் தெற்கும்"

பொருள்: வெளிப்பாளையத்தின் வடக்கிலுள்ள காடவர் கோன்பாடியின் தெற்குப்பகுதியின் எல்லையிலிருந்த வெளிப் பாளையத்திற்குரிய நிலம், வடக்கெல்லை. இதன் தெற்கு புத்த வளாகம்.

செப். தொடர்: "ஆக நான்கெல்லைக்குட்பட்ட நிலம் முப்பத் தொன்றே முக்காலே இரண்டுமா முந்திரிகை”,

பொருள்: இவை நான்கு எல்லைகளுக்கடங்கிய நிலப்பகுதியில் விரிவாக அமைந்தது, சூளாமணி விகாரை அமைந்த புத்த வளாகம். இதன் பரப்பளவை இக்கால மனை அளவில் (60 x 40 = 2400 ச. அடி) சொன்னால் ஏறத்தாழ 4000 மனைகளைக் கொண்ட தாகும். இவ்விருவகை அமைப்பையும் காட்டும் வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/171&oldid=585052" இலிருந்து மீள்விக்கப்பட்டது