பக்கம்:நாகப்பட்டினம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை Í 57

நகர்க்குள் அமைந்தவை

யானைகட்டி முடுக்கு - முடுக்கு

வெளிப்பாளையம் — штбобтшцb

மேலைக் கோட்டை வாயில் -

- - - - வாயில் வடக்குக் கோட்டை வாயில் காடவர்கோன்பாடி - பாடி நாகர்பட்டினம் - பட்டினம்

மேற்காணப்பெற்ற அனைத்துப் பெயர்களுள்ளும் நாகர் பட்டினம், நாகூர், பார்ப்பனச் சேரி, பரவை, காடவர்கோன்பாடி, வெளிப்பாளையம் ஆகியவற்றின் பெயர்க் காரணங்கள் ஆங்காங்கே விளக்கப் பெற்றுள்ளன. பிறபெயர்களுள் விளக்கம் பெற வேண்டியன உள்ளன. அவ்விளக்கங்களால் வரலாற்றுச் செய்தி களும் தமிழ்ச் செய்திகளும் கிடைக்கும். எனவே நாகை நகர் அத்துணை ஊர்களும் அடங்கிய பெட்டக நகராகும். பொய்கை நல்லுனர்

பொய்கை என்றால் வளமார்ந்த குளம். இக்குளம் ஒன்று அமைந்த குளத்து ஊர் நல்லூர் சேர்ந்து இப்பெயர் பெற்றது. இதன் சுருக்கமாகப் பொய்யூர் என்று வழங்கப்படினும் இஃது உண்மை ஊரே'. இப்பெயருள்ள ஊர் ஒன்று பாப்பாகுடியை உள்ளடக்கிய தாகத் தனிக் கூற்றமாக உள்ளது. முன்னர் புது வெளிக்கோபுரத்திற்கு மேற்கில் வருவாய் தரும் ஒரு தோட்டம் இருந்தது குறிக்கப்பெற்றது. அது போன்று இப்பொய்கையூருக்கும் உரியதாக ஒரு தோட்டம் இருந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க வளமான தோட்டம்.

மராத்திய கால படேவியா வெள்ளிப்பட்டயத்தில்,

".. னாக பட்டினத்துக் கோட்டைக்குத் தெனம்பிறமாய் இருக்கிற

பொய்யூர்த் தோட்டமும்" (24) குறிக்கப்படுகிறது. இதன் வருவாய் ஆலந்துக்காரருக்கு வழங்கப் பட்டிருப்பதால் இஃதொரு வருவாய் தரும் தோட்டமாக இருந்துள்ளது. இப்பொய்கைநல்லூர் இக்காலத்தில் இரண்டு பகுதிகளாக வடக்குப் பொய்யூர், தெற்குப் பொய்யூர் என்று வழங்கப்படும் ஊர்களாக உள்ளன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/175&oldid=585056" இலிருந்து மீள்விக்கப்பட்டது