பக்கம்:நாகப்பட்டினம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 58 நாகபட்டினம்

பூவத்தடி

இவ்வூர் வேளாங்கன்னிக்குத் தெற்கே 6 கி.மீட்டரில் உள்ளது. பூவம் என்பது மரத்தின் பெயர். இது குறிப்பிடத்தக்க பெரிய மரம் (Love Tree Longaro). இதன் தாவரவியல் பெயர் நெபேலிகரு லாங்கனா"(NephelcomLongana). இது தமிழில் கும்பாதிரி என்றும் "பூவத்தி" என்றும் வழங்கப்பெறும். குறிக்கத்தக்க மரம் இருக்கிற பகுதியில் அமையும் இடமோ ஊரோ மரத்தடி என்று பெயர் பெறுவதுண்டு. விழுந்தமா (மாமரம்) வடி, தேக்கடி, அரசடி எனும் பெயர்கள் உள்ளன. பூவம் என்றோர் ஊர் காரைக்கால், பொறையார் சாலையில் உள்ளது. எனவே, பூவமரம் ஒன்றிருந்து அதன் அடையாளப் பெயராகப் 'பூவத்தடி' என்று பெயர் பெற்றிருந்த ஊரை இராமாயணப் புராணத்தார் இராமர் சிவனை வழிபடப் பூவைத் தேடிப்போய் இவ்விடத்தில் கண்டார் என்று கூறி இதனைப் 'பூவைத்தேடி என்று குறித்தனர். இது கதை.

தஞ்சை மராத்திய மன்னர்க்குக் குல ஆசானாக வந்து அமைந்த இராமதாசர் என்பாரது பெயரை ஒர் ஆனைப் பெயராகவே மராத்திய மன்னர் கொண்டனர். தம் அரசின் ஆவனங்களில் கைச்சான்றிடும் போது தம்பெயரை ரீராமபிரதாப்' என்றே இட்டனர். அரசு முத்திரையிலும் காவலர்கள் வில்லையிலும் இவ்வாறே பொறிக்கப்பட்டது. (25) மராத்திய மன்னர் பிரதாபசிங்கு பிரதாபராம் என்றே சிறப்பாகப் பெயர் பெற்றார். அவர் பெயரால் தஞ்சை அரண்மனையில் பிரதாபராமசுவாமி மகால் என்று ஒரு மகால் பெயர் அமைந்தது. தஞ்சையில் பிரதாபராமசாமி கோயில் ஒன்று உண்டு. இவ்வகையில் பிரதாபசிங்கு காலத்திலோ அவர்க்குப் பின்னர் அவர் நினைவாகவோ பூவத்தடி, பிரதாபராமபுரம் என்று பெயர் பெற்றது. அந்தோனிப்பேட்டை

இச்சிற்றுார் நாகை நகரின் மேற்கில் புத்துாரை அடுத்து வேளாங்கன்னிச் சாலைப் பக்கத்தில் புகைவண்டி நிலையமாக உள்ளது. இப்போது அந்தணப் பேட்டை என்று வழங்கப் பெறுகின்றது. இங்கு முன்னர் அந்தனர் துறவியர் - பார்ப்பனர் - வாழ்ந்திருக்கக்கூடும். டாக்டர் கிருட்டினசாமி ஐயங்கார் என்பார் புத்துரை அடுத்து அக்கரையகரம் இருந்ததாக எழுதியுள்ளார். இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இவ்வூர் அந்தணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/176&oldid=585057" இலிருந்து மீள்விக்கப்பட்டது