பக்கம்:நாகப்பட்டினம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 163

இடித்துத் தள்ளித் தம் சபைக்குரிய கல்வி நிலையக் கட்டடம் எழுப்பினர். இத்துடன் நாகையில் புத்த சமயத்தின் மூச்சு நின்றது.

இம்மாற்றத்தால் புத்தக்களத்தில் உள்ளேயும் சைவர், கிறித்துவர் இடம் பெற்றனர். கட்டடங்கள் எழும்பின. ஒருவகைச் சிறுவளர்ச்சி நேர்ந்தது. பின்னர் ஆங்கிலர் ஆட்சியில் கிழக்குப் பகுதியில் மருத்துவமனை, நகராட்சி நூலகம், பயணிகள் இல்லம் அமைய லாயின. -

மேற்கண்ட இரண்டும் (1) நேர்ந்த மாற்றமும் (2) அதன் தொடர் பான குடியமைப்பும் ஆகும். ஒரு தனி ஊர்

அடுத்து நாகூர் சோழர்கால ஊர்ப்பிரிவின்படி குறித்தால் ஒரு தனி ஊராக உருவாயிற்று எனலாம். -

நாகூரின் கிழக்குப்பகுதியில் முன்னர் முகமதியர் மரக்கல வரையரையராகக் குடியேறினர். இக்குடியேற்றம் வளர்ந்தது. 1558இல் முகமதியத் தூய துறவியார் அப்துல் காதிறு அவர்கள் இங்கு அடக்கமானார்கள். அதனால் குறிப்பிடத்தக்க முகமதியக் களமாக நாகூர் அமைந்தது. அடக்கமான இடத்தில் அவர் பள்ளிப் படையாக முகமதியக் கோயிலாம் தர்கா வடிவம் பெற்றது. தொடர்ந்து மாடத் தூண்களாகச் சிறிய அளவில் மனோராக்கள் எழுந்தன. 1757இல் மராத்திய மன்னர் பிரதாபசிங்கால் பெரிய மனோரா 131 அடி உயரத்தில் 11 மாடங்களுடன் பீடுடன் எழுந்தது. இஃது நாகூருக்கு மட்டுமன்றி நாகைக்கும் ஒர் சிறப்பு அமைப்பா யிற்று.

நாகூரில் சிறு அளவில் ஏற்றுமதி இறக்குமதி கொண்ட படகுத்துறை 1806-இல் ஒரு சிறு துறைமுகமாக அமைந்தது.

இது நாகைக்குப் (3) புறநகர் அமைப்பு என்று முதலில் அமைந்ததாகும். . ஒரு கன்னி ஊர்

(4) அடுத்துச் சுற்றுச் சார்பு அமைப்பாக நாகைக்குத் தெற்கில் 10 கி.மீட்டரில் போர்ச்சுகீசியரால் கிறித்து மரியன்னை கோயில் ஒன்று சிறுகுடில் கோயிலாக அமைந்தது. இது பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் நேர்ந்தது. 1920இல் இக்குடில் கோயில் கவின் மிகு பெருங்கோயிலாக வளர்ந்து வேளாங்கன்னி மாதா கோவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/181&oldid=585062" இலிருந்து மீள்விக்கப்பட்டது