பக்கம்:நாகப்பட்டினம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 64 நாகபட்டினம்

என்னும் புகழ்ப் பெயர் கொண்டது. இதன் வளர்ச்சி இன்றையத் தோற்றத்தில் ஒரு பெருமித எடுப்பான காட்சியாக உள்ளது. வடக்கே நாகூரால் துணைப்புகழ்பெற்ற நாகை அமைப்பு, தெற்கே வேளாங்கன்னியால் மேலுமொரு துணைப் புகழ் கொண்டது. ஐரோப்பியர் காலம்

(5) ஐரோப்பியர் வரவும் ஆளுகையும் பெற்ற நாகை ஒல்லாந்தரால் கொடி மரத்து மேடை, ஆளுநர் வளமனை, ஒல்லாந்தர் வீதி, ஏசு கிறித்துவக் கோயில் எனப் புதுதலைப்புகளைக் கொண்டது. முதற் கடற்கரைச் சாலையில் சரக்குச் சேமிப்புக் கிடங்குகளும், சிறுசிறு தொழிலகங்களும் அமைந்தன.

1958இல் தொடங்கிய ஆங்கிலர் ஆட்சியால் இக்காலத் தோற்றம் பெரும் அளவிற்கு வளர்ந்தது. முன்னர் கண்டது போல் புகை வண்டிநிலையங்கள். துறைமுக அலுவலகம், ஆட்சி அலுவலகங்கள், அஞ்சல், பேருந்து நிலையங்கள் அமைந்தன. நகருக்கணிகலம் போன்று கலங்கரை விளக்கம் எழுந்தது.

வளரும் நாகை விடுதலை பெற்ற இந்தியாவின் நாகை மேலும் வளர்ந்து நகரமைப்பில் விரிவடைந்தது. நாகூரையும் நாகையையும் இணைக்கும் அளவிற்கு நாகூரை அடுத்துத் தெற்காகப் பலமுனைத் தொழிற்கல்லூரி, அரசினர் தொழில் நுட்பப் பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அலுவலகம் என அமைந்தன.

நகரிலும் கடற்கரையோரமாக அ.து. மகளிர் கல்லூரிக் கட்டடம், அரசின் சரக்குக் கிடங்கு, தமிழ்நாடு பயணியர் வளமனை, கடுவை யாற்றில் படகுப் போக்குவரத்திற்கு வாய்ப்பாகத் தூக்குப் பாலம் என அமைந்தன. >

நகருள் குமரன் கோயிலாரும், சுழற் சங்கத்தாரும் இணைந்து எழுப்பிய குமரன் திருமண மண்டபம், நகை வணிகச் செட்டியார் எழுப்பிய பாலகங்காதரஞ் செட்டியார் (D.B.G) திருமணமண்டபம் வெளிவையில் தனியார் இராசா திருமண மண்டபமும் பழம்பெரும் வீடுகள் மாற்றப்பட்ட திருமண இல்லங்களும் அமைந்தன. திரையரங்குகள் நகரில் இரண்டும், நாகூரில் ஒன்றும் அமைந்தன. புத்தக் களமாயிருந்த காலத்துப் பதரிதிட்டா, அவுரித்திடல்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/182&oldid=585063" இலிருந்து மீள்விக்கப்பட்டது