பக்கம்:நாகப்பட்டினம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 1.65

மருவி அது பொதுக்கூட்டம் நடத்தும் பெரிய திடலாகி நேரு திறந்த வெளி அரங்கமாகியது. இன்று புதிய பேருந்து நிலையமாகி உள்ளது.

புறநகர்களாக வெளிப்பாளையம் பகுதியின் கிழக்கே இளஞ்சேரன் நகர் அதனையொட்டி வடக்கில் புதிய மறைமலை நகர் (அரசு அலுவலர் குடியிருப்பு) வெளிப்பாளையம் மேற்குப் பகுதியில் சிறிய மறைமலை நகரம், காயாரோகண நகரம் உருவாகி யுள்ளன.

ஒரு நகருக்கு வேண்டியனவாகிய நூலகம், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், சிறு தொழிலகங்கள், பூங்காக்கள் (சாலமன் பூங்கா, தம்பித்துரை பூங்கா, கொடி மரத்து மேடைப் பூங்கா) அமைந் துள்ளன. -

தமிழ்ச் சான்றோரைப் போற்றும் தகவுடைப்பணியாக நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளாரின் முழு உருவ வெண்கலச் சிலை நாகை புகைவண்டி நிலைய முகப்பில் நாகைத் தமிழ்ச் சங்கத்தால் நாட்டப்பெற்றது. அதனைச் சுற்றிலும் இரும்பு கவைத்தட்டி அமைப்புடன் சிறு பூங்கா அமைத்து நகரில் அழகிய

காட்சி தந்துவருகின்றது. .*

நாகை நகரப் புகுவாயில் ஊராம் புத்துரிலும் நகருள் மேலைக் கோட்டை வாயிலிலும் அறிஞர் அண்ணா சிலைகளும், காசுமாபாலிடன் முன்றிலில் பெருந்தகை வே.ப. காயாரோகணம் பிள்ளையின் மார்பளவுச் சிலையும் அமைந்துள்ளன.

பழங்கால நில அளவைகளுள் ஒன்று குரோசம்', 21/2 மைல் சுற்றளவைக் கொண்டது ஒரு குரோசம். நாகை நகரம் ஐந்து குரோசம் கொண்டதாகக் கணக்கிட்டிருந்தனர். இதனைப் பிள்ளையவர்கள்.

"அறைபெரும் புகழ்சால் நாகை

ஐங்குரோ சத்தில் உள்ள நிறைதரும் இலிங்க தீர்த்தம் முதலியனவும்" (30) என்று குறித்தார்.

pr -

  • ●哆多姆 参命 *- #é参桑桑略* நாகைய

பயன்நிறை ஐங்குரோசப் பதி" (31) என்று நாகை நான்மணி மாலை குறிக்கிறது. இதன்படி நாகை நகரம் 121/2.மைல் அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/183&oldid=585064" இலிருந்து மீள்விக்கப்பட்டது