பக்கம்:நாகப்பட்டினம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நாகபட்டினம்

சேக்கிழாரும் இப்பதினெட்டை எண்ணித்தான் பாடினார். ஆயினும் இப்பதினெட்டு நாட்டாரும், நாகை நகர்ரின் மக்களாக வாழ்ந்தனர்; உலவினர் என்று கொள்ள முடியவில்லை, இப்பதினெட்டு நாட்டாரில் ஒன்பது நில மக்கள் நாகை நகரில் வாழ்ந்தவராகவும் உலவியவராகவும் கொள்ள வேண்டும்.

பிற ஒன்பதின் மக்கள் அடையாளம் இல்லை. என்றாலும் வேறு ஒன்பது நிலத்து மக்கள் செங்கனித் தோற்றமாகவும். இலைமறை காயாகவும் தென்படுகின்றனர்.

அவ்வொன்பதின்மர், - வடபுலத்துத் தட்சசீலத்திலிருந்து வந்த புத்தத் துறவியர் (1), நாகநாட்டு நாகர் (2), வடபுலத்து ஆரியப் பார்ப்பனர் (3), உரோமர் (4), போர்த்துகீசியர் (5), ஆலந்தர் (6), பர்மியர் (7), ஆங்கிலர் (8), குசராத்தியர் (9) ஆவர். -

இப்பதினெட்டு நிலத்து மக்களும் நாகை நகரைத் தத்தம் வாழ்வாலும், வரவாலும் அணி செய்தனர். பதினெட்டு நிலத்துடன் பதினெட்டுமொழியும் இங்கு ஒலித்தது. தமிழ் அல்லாத பிற பதினேழு மொழிச் சொல்லும் "திசைச்சொல்" என்பதைப் பவனந்தியார்,

"ஒன்பதிற் றிரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும் தம்குறிப் பினவே திசைச்சொல் என்ப", (6) என்று காட்டினார். இப்பதினெட்டு நிலத்தார் நாகை நகரில் இடம் கொண்டதையும் அவரவர் மொழியையும் கால வாரியாகக் காணலாம்.

ஆ. நாகையில் பதினெட்டு

1. தமிழர் இவர் தமிழ் மண்ணின் - நாகை மண்ணின் மக்கள். கி.மு. நாகை நகரை நீர்ப்பெயற்று' என்று காட்டும். பெரும்பாணாற்றுப் படை இந்நகர்க்கு உரியவராக இருவகைத் தமிழ்க் குடியினரையும் வந்திறங்கியோராக ஒரு குடியினரையும் குறித்துள்ளது.

முதற் குடியினர் கடற்கரை நிலமாம் நெய்தல் நிலத்து மக்கள். கடற்கரை ஓரத்தில் "நாவாய் சூழ்ந்த நளிநீர்ப்படப்பை" (321)யில் வாழ்ந்த நுளையர் நுளைச்சியர் மணல்மேட்டுக் குப்பங்களில் வாழ்ந்தனர். இன்னோர் மீன்பிடிக்கும் கடலோடிகள். ஆடவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/188&oldid=585069" இலிருந்து மீள்விக்கப்பட்டது