பக்கம்:நாகப்பட்டினம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 1.7 .

மீன்பிடித்துவர, மகளிர் அங்காடியிலும் நகர்க்குள்ளும் விற்றனர். கரையை அடுத்த நகரில்,

"மாடம் ஓங்கிய மணல்மலி மறுகில் பரதவர் மலிந்த பல்வேறு தெரு" (7)க்கள் இருந்தன. இப்பரதவர் நெய்தல் நிலத் தலைமக்கள். இன்னோர் வணிகர், வணிகப் பொருள்கள் பலவற்றைக் கொட்டி வைத்த சரக்கறைகளை - பண்டசாலைகளைக் கொண்டவர். இப்பண்டசாலைகள் மிக உயர்ந்த மாடங்களாக அமைந்தவை. இவற்றைக் காவல் செய்ய ஏவலர்கள் இருந்தமையைப் பெரும்பாணாற்றுப்படை,

"சிலதர் காக்கும் சேண்உயர்வரைப்பு" (324) என்று கூறுகிறது. எனவே இந்நெய்தல் மக்கள் வளமாக வாழ்ந்துள்ளனர். நகருள்ளே மற்ற தமிழ்க் குடியினர் இடம் கொண்டிருந்தனர். அன்னார் "வயலை உழும் ஏறுகளுடன் ஆவினங்களையும், ஆடு களையும் அவற்றைக்காக்க நாய்களையும் கொண்டிருந்தனர். உள்நகரில் பசிய கொடிகள் பறக்கும். -

பலர்புகும் தோரண வாயில்களைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு இல்லத்தின் முன்றிலிலும் மக்கள் செம்பூக்களைத் துவியிருப்பர். இல்லங்கள், வான்பொர நிவந்த வேயா மாடங்கள் அஃதாவது கூரை வேயாமல் சுண்ணாம்பால் ஒட்டிப் பூசப்பட்ட மேல்தளம் உடையவை. விண்ணோக்கி உயர்ந்தவை. இங்கு இரவில் கொளுத்திய விளக்குகள் கடலோடும் கலங்களுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்தன" என்று உருத்திரங்கண்ணனார் (8) விளக்கியுள்ளார்.

இவ்விருவகைத் தமிழ்க் குடிமக்களும் தம் நகர்க்கு விருந்தாக வரும் புதியவர்க்குக் கூழும் கறிச்சோறும் படைத்து விருந் தோம்பினர். நெய்தல் நில மீனவர்

இக்காலத்தும் மீனவக் குடியினர் கரையோரத்தில் மணல்மேட்டுக் குப்பத்தில் மீன்பிடிக்கும் கடலோடிகளாகவே வாழ்கின்றனர். இத்தொழிலால் மிகுவளத்தில் வாழவில்லை. ஆடவர் உழைப்பின் உரத்தால் உடல்வளம் உள்ளவராகத் தென்படுவர். மகளிரும் காய்ந்த சருகுகளாகவே உள்ளனர். இக்காலம் படித்த இளைஞர் கப்பற் பணிகளில் அமர்ந்து வளங்காட்டுகின்றனர். இவருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/189&oldid=585070" இலிருந்து மீள்விக்கப்பட்டது