பக்கம்:நாகப்பட்டினம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 72 நாகபட்டினம்

திறனுடையவராக வாழ்ந்தாரை மதித்தனர் என்பதற்கு அடையாள மாகக் கீச்சான் குப்பம் தெரிகின்றது. தமக்கென மன்னரென்று சொல்லும் அளவில் ஒரு தலைமகனைக் கொண்டோர் நம்பியார் நகரில் உள்ளனர். நம்பி என்றால் தலைவன். இன்றும் அக்குடிவழி வந்தவர் உள்ளார். இல்லங்களில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு அவரை மேளதாளத்துடன் அழைத்து வந்து விரிப்பில் அமர வைத்து, போற்றி அவர் தலைமையிலேயே நடைமுறைகளைச் செய்கின்றனர். இவ்விருவகைத் தமிழ்க் குடியினரின் மொழி தமிழ்.

2. ஆரியப் பார்ப்பனர்

உருத்திரங்கண்ணனார் அறிமுகப்படுத்தும் மூன்றாவது குடியினர் ஆரியப் பார்ப்பனர். முன்னர் கண்ட பார்ப்பனச்சேரியில் தம் இடம் கண்டவர். ஆற்றில் நீராடிய தமிழ்க்குடிச் சிறுமியர் கழற்றி வைத்த காதணியை மீன்கொத்திப் பறவை கொத்திப் பறந்ததன்றோ? அது பறவைகள் அமரும் பனைமரத்தில் அமரவில்லையாம். பார்ப்பணச் சேரியில் வேள்வி செய்வதற்காகவே நட்டிருந்த வேள்வித் தூணின் மேல் அமர்ந்து காதணியை வைத்தது. அவ்வணி கலனின் ஒளி,

".......... யவனர் ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனில் பைப்பயத் தோன்றும்" என்றார். (9) இது கொண்டு அக்காலத்திலேயே வந்திறங்கிய பார்ப்பனர் தாம் தனிக்குடியினராக ஊருக்கு வெளியே குடி கொண்டனர். இன்னாரும் விருந்தாய் வருவோர்க்குப் பாற்சோறு வழங்கினார். இன்னோர் காலப்போக்கில் ஊர்ப்புறத்தை விட்டு ஊருக்குள் புகுந்து நகரின் நெஞ்சகமாம் இடத்தில் குடிகொண்டனர். அக்கரையகரத்தை ஊர்க்குள் அக்ரகாரமாக்கினர். இன்றும் எவ்வகைக் குறையும் இன்றி வளமுடன் வாழ்கின்றனர். 18 மொழி அல்லாதது

இவர்தம் மொழி வடமொழியாம் சமற்கிருதம், பேச்சில் தமிழைக் கொண்டாலும் உணர்வார்ந்த இல்ல நிகழ்ச்சிகள், வழிபாடு முதலியவற்றில் வடமொழியையே கொண்டதால் அஃதே இவர்தம் தாய்மொழியாகும். இம்மொழி மறைநூல், எழுதாக்கிளவி என்று எழுத்தில் இல்லாமல் ஒதும் மொழியாகவே இருந்தது. அதனால் தமிழ் வழக்கில் இம்மொழி 18 மொழிகளில் ஒன்றாகக் கொள்ளப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/190&oldid=585071" இலிருந்து மீள்விக்கப்பட்டது