பக்கம்:நாகப்பட்டினம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑”哇 நாகபட்டினம்

பாளிமொழி

இவர்தம் மொழி பாளி மொழி. பாளி மொழி வடமொழிச் சிதைவு மொழி. புத்தர் இம்மொழியில் தான் பேசினார். திரிபிடகம் முதலிய புத்த நூல்கள் இம்மொழியில்தான் எழுதப்பட்டன. இப்பாளி மொழி நாகையில் விகாரை அளவில் உரையாடப் பெற்றது; பேசப் பெற்றது; நூல்களாக எழுதப் பெற்றது.

4. நாகநாட்டு மக்கள்

நாகநாட்டு இளவரசி பீலிவளையின் தமிழ்நாட்டு நாகர்நகர் வருகையை மணிமேகலைக் காப்பியம் அறிவிக்கின்றது. நாகநாட்டரசன் ஒருவன் நாகையில் கட்டிய சிவன்கோயில் நாகநாதர் கோயில் என்று உள்ளது. நாகர் பெயரில் நாகர் தோப்பு என்று வழக்கும். ஆவணப்பதிவும் உள்ளது. இது நாகை நகால் நாக மக்கள் இடம் பெற்றமையின் அடையாளம். நாகர் மன்னன் நாகையில் ஒரு சிவன் கோயில் கட்டினான் என்பது நாகர் தமிழ் மண்ணின் சமயமாம் சைவத்தில் ஈடுபாடு கொண்டான் என்னும் புதுமை தெரிகிறது. - நாகர் தமிழரே

இந்த நாகர் யாவர்: மூலத்தில் எவ்வினத்தவர் இதனை எவரும் விரிவாக ஆராயவில்லை. எனினும் நாகர் என்பார் தமிழின மூலம் கொண்டவர் என்பதே உண்மை. தமிழ் மண்ணில் தோன்றிய, உலகில் பல நிலங்களிலும் பரவிய தமிழினத்தின் ஒரு கூறு கீழை நிலங்களில் குடியேறிற்று. அவற்றில் நாகநிலம் ஒன்று. நாகர் என்னும் சொல்லே அதற்குச் சான்று. இச்சொல் நாகு + அர் என்று பிரிபடும். நாகு என்றால் இளமை, நாகர் தமிழின வழியினர். அவர் தம் மொழிச் சொற்கள் மிகப்பல தமிழ் மூலம் கொண்டவை.

பூம்புகாரிலிருந்து சென்ற சாதுவன் என்னும் வாணிகன் கலம் கவிழ்ந்து நாகநாட்டுக் கரையில் ஒதுங்கியபோது ஒரு பகுதி நாக ராகிய நாகரிகமற்ற ஆதிக் குடிகள் பேசிய மொழியை அறிந்தான் என்கின்றது மணிமேகலைக் காப்பியம். அவர்தம் கொச்சை மொழி யிலும் தமிழ் மூலம் இருந்தமையாலேயே உணர முடிந்தது. நாகர் மொழி தமிழ்த் திரிபு மொழியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/192&oldid=585073" இலிருந்து மீள்விக்கப்பட்டது