பக்கம்:நாகப்பட்டினம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 175

அவர்தம் பழக்க வழக்கங்களும் பண்பாடுகளும் தமிழர் வழியாகவே இருந்து அங்கு புத்தம் நிலைத்த பின்னர் மாற்றம் பெற்றது. எவ்வாறாயினும் மூலத்தால் அவர் தமிழரே.

புத்த சமயத் தொடர்பாலும் பின்னர் சிறு சிறு வணிகத்தாலும் நாகை மண்ணில இடம்பெற்ற நாகர் தம் புத்தப் பெருக்கத்தால் தமக்கெனச் சோழநாட்டுக் காசபதேவரைக் கொண்டு ஒரு புத்தப்பள்ளி கண்டதும் அதற்குத் தம் ஒலிப்பில் நாகனன விகாரை என்று பெயரிட்டதும் நாகர் இம்மண்ணின் மைந்தராகவே வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள். அவர்களாலே இந்நகர் துறைமுகமான பின்னரும் நாகர்பட்டினம் என்று பெயர் பெற்றமை நோக்கில் அவர்தம் கலப்புற்ற தொடர்பு கல்லெழுத் தாகிறது. பட்டினம் மட்டுமன்றி நாகர் பெரும்படியாக வாழ்ந்த ஊர் நாகர் ஊர் - நாகர் என்றமையும் கல்லெழுத்தை ஆழமாக்குகின்றது. மற்றும் பீலிவளைக்குப் பிறந்த சோழனது குழந்தை இளந்திரை யனாகப் புகழ்பெற்றதையும் அவன் காஞ்சியை ஆண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கியத்தைப் பெற்றதையும் பொருத்திப்பார்த்தால் நாகர் இந்நாட்டை மூலமாகக் கொண்டவர் என்பது உறுதியாகும்.

நாகநாட்டுத் தீவிலிருந்து வந்தவராயினும் நாகை நகரைப் பொறுத்த அளவில் நாகர் தமிழ் மக்களேயாவர். இன்று பிரித்தறிய இயலாத நிலையில் ஒன்றியுள்ளனர் எனலாம்.

5. சிங்கள மக்கள்

சிங்களர் என்பார் இலங்கைத் தீவின் மக்கள். இலங்கைக்கும் தமிழகத்திற்கும் பல்வகையான தொடர்புகள் உள்ளன. எனினும், நாகை நகரைப் பொறுத்த அளவில் புத்தக் காலத்தில் புத்தச் சமயத் தொடர்பும் போகப்போக வணிகத் தொடர்பும் ஏற்பட்டன. கீழை நாட்டாரின் நாகைப் பயணத்தில் இலங்கை வழியே இன்றியமை யாததாக இருந்தது.

புத்தத் துறவியர் நாகை நகர மக்கள்பால் தொடர்பு கொண்டவர் அல்லர். ஆனால் வணிகம் கருதி வந்த சிங்கள மக்கள் நகரிலும் இடம் பெற்றனர்; நகரத்தாருடன் உறைந்தனர். சிங்களர் இடம் கொண்ட தற்குப் பெரும் அடையாளங்களைக் காண இயலாது. ஆயினும் நாகைப் பெருமாள் வடக்கு வீதியின் தொடக்கத்தில் தெற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/193&oldid=585074" இலிருந்து மீள்விக்கப்பட்டது