பக்கம்:நாகப்பட்டினம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 78 நாகபட்டினம்

"சூளாமணி விகாரை எடுத்ததை அறிந்தோம். அதற்கு இராசராசனும் இராசேந்திரனும் அறக்கட்டளை நிறுவியதையும் அறிந்தோம்.

இதற்கு முன்னரே கி.பி. 871 இல் சாவக நாட்டார் குடியிருப்பு நாகையில் இருந்ததைப் பயணிகள் குறித்துள்ளனர். சாவகத்தார் நாகைக்கு வந்து குடியிருப்புப் பெற்றதைப் போன்றே நாகர்ப்பட்டின நகரத்தாரும் சாவகத்திற்குச் சென்று வணிகம் நடத்தியும், தொழில் செய்தும் குடியிருப்புப் பெற்றனர். இது போன்று தமிழர் இலங்கைக் கும், மலேயாவிற்கும் சென்று குடியமர்ந்தனர். இலங்கையில் வட்டுக்கோட்டை, திருநெல்வேலி, இராமநாதபுரம் முதலிய ஊர்களை இன்றும் காண்கிறோம். அவ்வவ்வூர் மக்கள் வாழ்ந்த பகுதிகள் இவ்வாறு பெயர் பெற்றன. இவைபோன்று சாவகத்தில் நாக பட்டினம் என்றொரு நகர் இன்றும் உள்ளது. நாகை மக்கள் அமைந்ததன் அறிகுறி அது.

இவற்றைக் கொண்டு நோக்கினால் சாவக நாட்டு மக்கள் நாகை நகரில் இடம்பெற்று ஒரளவில் குடியமர்ந்ததையும் பெருமளவில் வந்துபோய் உலவியதையும் உணரலாம். அவர்களது சிற்பக்கலை நாகைக்கு ஒரு சிறப்பைத் தந்தது. காப்பிக்கொட்டை, தேயிலை, இலவங்கம் (கிராம்பு) முதலிய பொருள்களை நாகைத் தமிழரும் பெற்றனர். -

சாவக நாட்டு மக்களது மொழி சாவகம் என்பது. இது மலேயா

மொழியின் பங்கு கொண்டது. நாகையில் இம்மொழி ஒலித்தது.

7. கடாரத்து மக்கள்

"கடாரம் என்று தமிழ் குறிப்பிடும் நாட்டைப் பர்மா என்றும் சுமத்திரா என்றும் வரலாற்றாசிரியர்கள் இருவகையாகக் குறிக்கின்றனர். பர்மா நாட்டுத் தொடர்பு இருந்தது. கடாரம் பர்மா அன்று

மலேயாவில் தோன்றி இந்தோனியோவில் புகுந்த சிரீவிசய அரச குலத்தாரும் அவர்வழி சைலேந்திர அரச குலத்தாரும் யாவாவிலும் சுமத்திராவிலும் இருந்தனர். சைலேந்திரர் தமிழகத்துடன் அதிலும் நாகையுடன் தொடர்பு கொண்டவர். இராசராசப் பெருமன்னன் காலத்தில் இவ்விரு நாட்டு வணிகமும் நடந்தது. சுமத்திராவிலும் மேற்கு யாவாவிலும் ஆண்ட சங்கிராம விசயோத்துங்கவர்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/196&oldid=585077" இலிருந்து மீள்விக்கப்பட்டது