பக்கம்:நாகப்பட்டினம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 181

அமைதியை மலர்த்துக' என்று பொருள்படும் "கோய் -ஃசெ" என்ற பெயரை அக்கோபுரத்தில் கல்வெட்டாகப் பதிக்கச் சொன்னான். அவனே ஒரு கல்தூணையும் அனுப்பி வைத்தான். இக்கல்வெட்டு நாகையில் உள்ள செய்தியை 15 ஆம் நூற்றாண்டுச் சீன நூலாகிய தாவோ - யி - சிலியோ என்பது அறிவிக்கிறது. இந்தப் புது வெளிக்கோபுரம் சீனக் கோபுரம் என்றும் வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. எனவே கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாகை சீனர் தொடர்பு ஆழமாகவே படிந்துள்ளது.

சீன வணிகர் வரவு நாகையில் பெருகியதால் அவர்தம் தொழுகைக்கெனத் தனியாகக் புத்தக்கோபுரம் காணப்பட்டது.

சங்க இலக்கியங்களில் சீனர் பற்றிய குறிப்பு இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய உரிச்சொற்கள் நூலாகிய திவாகர நிகண்டும் பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் எழுந்த மயிலைநாதர் (நன்னூலுக்கு) உரையும் தமிழ்நாட்டில் வழங்கிய 18 மொழிகளை பட்டியலிட்டுள்ளன. அவற்றின் 10 மொழிகள் இரண்டிலும் ஒத்துள்ளன. அவற்றுள் ஒன்று சீனம். எனவே ஒன்பதாம் நூற்றாண்டின் முன்னரே சீனமக்கள் தமிழகத்தில் அமைந்தமை புலப்படும். நாகையில் சீனப் பயணிகள்

சீனநாட்டு அலுவலராக இந்த மார்கோபோலோ பயணியாக நாகை வந்தார். தாம் இங்கு சீனக் கோயிலைக் கண்டதாகக் குறித்துள்ளார். மேலும் சீனப் பயணிகளாக யுவான் சுவான், இத் சிங் ஊஃசிங் (Ww-Hing) -ேஃசுங் (She-Hing)ஆகியவரும் நாகை வந்து தங்கினர். பின்னிருவர் உயிர்ப் பயிற்சியாம் யோகம் கற்று இலங்கை சென்று புத்தர் பல்லைக் கண்டு தொழுதுள்ளனர். - - இதுபோன்றே தமிழகத்திலிருந்தும் நாகையிலிருந்தும் போதி தருமர், தம்மபாலர், புத்திதர்ம மகாதேரர், போதிசேனா, பரத்துவாசர் முதலியோர் பர்மா வழியாகச் சீனா சென்று புத்த அறிவுரைகள் வழங்கி வந்தனர்.

இவ்வாறு புத்தத் தொடர்பு வணிகத்தால்தான் வளர்ந்தது. பூம்புகார் நகரில் பல்வகை நாட்டு வணிகம் வளர்ந்ததைப் பட்டினப்பாலை இறக்குமதியான பொருள்கள் வழி காட்டுகிறது. அதில் சீனக்குறிப்பு, இல்லை என்றாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/199&oldid=585080" இலிருந்து மீள்விக்கப்பட்டது