பக்கம்:நாகப்பட்டினம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நாகபட்டினம்

"புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்" (16) என்னும் அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்,

'மாக்கள் என்றது சோனகர், சீனர் முதலியோரை" என்று எழுதினார். சங்கப்பாட்டில் நேரடிக் குறிப்பு இன்மையால் 14ஆம் நூற்றாண்டிலான நச்சினார்க்கினியர் தாம் கண்டதைக் குறித்தார்

бтбутболlib. -

"அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்"(17) என்று நாட்டை யும் அந்நாட்டார் தொழில் திறத்தையும் குறிக்கும் மணிமேகலையும் சீனத்தைக் குறிக்கவில்லை.

எவ்வாறாயினும் ஐந்தாம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை சீனத்தார் நாகையில் உலவினர், தங்கினர் 6T60T.60mlo.

சீனச் சூடம்

சீனத்துப் பட்டு, சீனவெடி, சீனப் படிகாரம், சீனக்கற்கண்டு, னேக் கண்ணாடி, சீனச் சட்டி (இரும்பு), சீனச் சூடம், சீனப் பீங்கான் எனும் பொருள்கள் அன்று முதல் இன்றும் அவர்தம் வணிகத்தைச் சொல்லிக் கொண்டுள்ளன. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் (14 ஆம் நூற்றாண்டு) சிலம்பில் வரும் தொகுகருப் பூரமும்" (18) என்பதற்குச் "சூடன் - சீனச் சூடன் என்று பெயர் கூறப்பட்ட" என்று எழுதினார்.

ஒட்டு மொத்தமாகச் சீனர் வணிகர்களாகவும், புத்த வழிபாட்டளராகவும் நாகையில் இடம் பெற்றதை அறியலாம். சீனமொழி

சீனர்தம் மொழி சீனம். நாகையில் ஒலித்தது மட்டுமன்றிச் சீனக் கோபுரம் என்று பெயரோடு சீன எழுத்துக்களையும் கல்வெட்டாகப் பெற்றது. -

9. உரோமர்

மேலைநாட்டு உரோமர் தமிழகத்துப் பொருள்களை நாடி வந்தனர். மேலும் உரோம நாடு கிறித்துவ மதத்துத் தலைநகர். இன்றும் வாக்டிகன் நகர் ஒரு தனி அரசு போன்ற நகர். உரோமன் கத்தோலிக்கர் என்பதை அறிவோம். கிறித்துவ மதப் பரப்பலுக் காகவும் உரோமர் உலகின் பலமுனை நகர்களுக்கும் சென்றனர். இவ்விருவகையிலும் தமிழகத்துடன் தொடர்பு கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/200&oldid=585081" இலிருந்து மீள்விக்கப்பட்டது