பக்கம்:நாகப்பட்டினம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நாகபட்டினம்

தண்மகிழ் தேறலாம் தேன் கொணர்ந்தனர். மணப்பொருள்களாம் அத்தர், புனுகு, சவ்வாது நாகைக்கு வந்தன. சோனக மீன்கள் -

அவர் சோனகர் என்று பெயர் பெற்றது போன்று அவர் நாட்டுக் கடல் மீன்கள் சோனைக் கெழுத்தி, சோனைவாளை, சோனைத் திருக்கை தமிழகத்திலும் நாகையிலும் அமைந்தன. சோனைச் சிடுக்கு என்னும் சிடுக்கெடுக்கும் சீப்பு வந்தது. அதில் மாணிக்கக்கல் பதிக்கப்பட்டிருந்தது.

இவற்றையெல்லாம்விட அரேபிய நாட்டுக் குதிரைகள் பூம்பு காரிலும் பின்னர் நாகையிலும் இறங்கின. அக்காலச் சோனகராம் அரபியர் வந்து போனவர் நாகையில் உலவியரே.

இசுலாமியர்

கி.பி. 17 ஆம் நூற்றாண்டளவில் பீசப்பூர் சுல்தானின் படைத் தலைவனாகிய மராட்டிய ஏகோசி தஞ்சையை ஆண்டபோது முகமதியர் நாகைக்கு வந்தனர். -

அரேபியர் மதத்தால் - இசுலாமியர். அரேபியாவின் மக்கா நகரத்தில் பிறந்து அம்மதத்தை நபி திருமகனார் முகம்மது அவர்கள் பரப்ப அவரைப் பின்பற்றியோர் முகம்மதியர் எனப்பட்டனர். தமிழர் பெருமைக்குரிய மக்களைச் சீமான், பூமான் என்றது போன்று முகம்மதியரையும் "முசல்மான்" என்றனர்.

மணிமேகலை "யவனத் தச்சர்" என்று குறிப்பிட்டது. தச்சர் கல்தச்சரும் மரத்தச்சருமாவர். மரக்கலத் தச்சில் சிறந்தவர் மரக்கலவரையராக நாகூரில் அமைந்தனர். நாகூரில் துறவுத் திருமகனார் காதிறு அவர்கள் அடக்கமானதும், அங்கு முகம்மதியப் பெருமக்கள் பெருகினர். நாகையிலும் அமைந்தனர். -

கீழை நாடுகளான மலேயா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனிசியா, -- ஆசுதிரேலியா, தாய்லாந்து நாடுகளுக்கு நாகையிலிருந்துதான் இசுலாமியர் சென்று பரவினர். இன்றைய அளவில் முகம்மதியராம் இசுலாமியர் நாகையிலும் நாகூரிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களது உடன்பிறப்புக்களாகவே வாழ்கின்றனர். அவர்கள் தொழுகைக்குப் பள்ளி வாசல்கள் உருவாகியுள்ளன. கீழை நாடுகளுக்கும் குவைத்து, ஈரான் நாடுகளுக்கும் சென்று தொழில் செய்தும், வணிகம் செய்தும், பணி செய்தும் பொருளிட்டி நாகைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/204&oldid=585085" இலிருந்து மீள்விக்கப்பட்டது