பக்கம்:நாகப்பட்டினம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை - 187

வந்து வளம் கூட்டுகின்றனர். இன்றும் நாகூர் என்றாலே வெளிநாட்டு நுகர் பொருள்கள், கவின் பொருள்கள், மணப் பொருள்கள் மகம்மதிய வணிகர்களால் வழங்கப்படும் இசுலாமியர் ஊர் என்று விளங்குகின்றது. மேலும் ஒரு முத்திரையாக நாகை ஒரு தனி மாவட்டமாகி இசுலாமிய மக்களுக்கு உழைத்து பெருந்தலைவர் காயிதே மில்லத்து அவர்கள் பெயர் பெற்றுள்ளது. தமிழர் முகம்மதியர் இணைந்து - இசைந்து வாழும் தகுதி பெற்றுள்ளது நாகை, புதுமையாக அரசியல் களத்தில் புகுவோர் அதைக் கெடுக்காதிருக்க வேண்டும். -

அரசு - உருதுமொழி -

இசுலாமியரின் மூலமொழி அரபுமொழி. குர்ஆன் என்னும் அவர்தம் மறைநூல் அம்மொழியில் அமைந்தது. இன்றும் நாகையில் ஒதப்பட்டுகிறது. முகம்மதியர் பலவகையாகப் பெருகியதில் உருது, இந்துத்தானி பேசப்படுகின்றன. பொதுவில் தமிழிலேயே உரையாடு கின்றனர்; எழுதுகின்றனர். அரபு பாரசீக மொழித் தொடர்புடையது. அதன் அறிகுறியாக நாகூர் பெரிய மனோரா என்னும் மாடக்கோபுரக் கல்வெட்டு ஒன்று பாரசீக எழுத்தில் திகழ்கிறது.

12. பர்மியர்

நாகையில் பர்மா நாட்டினர் இடம் பெற்று வாழ்ந்தனர் என்று உறுதியாகக் கூற இயலவில்லை. ஆயினும், சில குறிப்புகள் அன்னார் இங்கு வந்து போயினர் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. புத்தமதத்தைச் சார்ந்தோர் பர்மியர். எனவே புத்தத் திருவிடமாக விளங்கிய நாகைக்கு அன்னார் வந்திருக்கலாம்.

இதனைவிட நாகை புத்த நிலை பற்றிய பல குறிப்புகளைப் பர்மா நாட்டுக் கலியாணி நகர்க் கல்வெட்டு தருகிறது. பர்மா நாட்டு விவரணச் சுவடிகள் நாகை புத்தச் செய்திகள் பலவற்றை வரலாற்றுக் குறிப்பிற்கு உதவியாகத் தருகின்றன.

சீனாவிலிருந்து சீனர் பர்மா வழியாகவே நாகை வந்தனர். நாகையிலிருந்து சீனா சென்றோரும் பர்மா வழியாகவே சென்றனர். இந்நிலையும் பர்மியரை நாகையுடன் பொருந்த வைக்கிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/205&oldid=585086" இலிருந்து மீள்விக்கப்பட்டது