பக்கம்:நாகப்பட்டினம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 1 8 9

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு வி.வி.கிரி அவர்களது மாமனார் நாகை சட்டையப்பர் கீழ வீதியில் வாழ்ந்தார்.

மலையாள மொழி

ஓரளவில் மலையாளமொழி நாகையில் ஒலித்தது - ஒலிக்கிறது.

بي

14. போர்த்துகீசியர்

ஆட்சி நாகைப் பகுதியில் போர்த்துகீசியர் நாகையில் வணிக நிறுவனமாகப் புகுந்து ஓரளவில் ஆளுகை நிலையிலும் இருந்ததைக் கண்டோம். இதனால் போர்த்துகீசிய நிறுவனத்தார் இடம் பெற்றனர். போர்த்துகீசிய அரசின் அலுவலர்களும் தங்கினர்.

நாகைக் கல்லறைத் தோட்டத்தில் போர்த்துகீசியர் பலரின் கல்லறைகள் தென்படுகின்றன. இவற்றால் பல போர்த்துகீசியர் குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன என அறியலாம். போர்த்துகீசிய மொழி

அவர்தம் போர்த்துகீசிய மொழி அவர்கட்குள் உரையாடப் பெற்றது. அம்மொழி எழுத்து கல்லறை கல்வெட்டுகளில் உள்ளது.

15. ஆலந்துக்காரர்

ஒன்றரை நூற்றாண்டிற்கு மேல் (158 ஆண்டுகள்) நாகையி லிருந்த போர்த்துகீசியர் நினைவைக் கல்லறையால்தான் எழுப்பு முடிகிறது. அவரைவிட ஏழு ஆண்டுகள் (165 ஆண்டுகள்) அதிகமாக ஆலந்தர் நம் நினைவிற்கு வரும் அளவில் இங்கு இருந்துள்ளனர். ஆளுநராகவும் அவர் குடும்பமாகவும் அலுவலர்களாகவும் அலுவலர் குடும்பங்களாகவும் நாகையில் வாழ்ந்துள்ளனர். போர்த்து கீசியருடன் போரிட்டதால் படை வீரர்களும் நாகையில் இருந்திருப்பர். எனவே சில நூற்றுக்கணக்கில் ஆலந்தர் நாகையில் வாழ்ந்ததாகக் கொள்ளலாம். - -

கல்ல்றைத் தோட்டக் கல்லறைக் கதையுடன் ஆலந்துச் சாலை என்றும் தெருப்பெயரால் ஆலந்தர் வாழ்ந்ததை அறிகிறோம். மேலும் மலையிறைவன் கோயில் திருப்பணியும், கிறித்துவக் கோயில் திருப்பணியும் அவர்தம் வாழ்வுச் செயல்களைச் சுட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/207&oldid=585088" இலிருந்து மீள்விக்கப்பட்டது