பக்கம்:நாகப்பட்டினம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90 நாகபட்டினம்

மற்றொன்றும் உண்டு. அது நாகையில் நீலா தெற்குத் தெருவில் குமரன் கோயில் உருவாக்கம் ஆலந்தரது ஒரு கைப்பற்றல் செயலால் நேர்ந்ததை அறிந்தோம். அக்கெடுதிச் செயல் அவர் வாழ்வின் தாழ் செயலையும் அறிவிக்கிறது.

அயல் நாட்டார் நாகையில் வாழ்ந்தனர் என்பதில் ஆலந்தார் தனித்துத் தென்படுகின்றனர். டச்சுமொழி

அவர்தம் டச்சுமொழி அவர்களால் பேசப்பட்டது. அம்மொழி எழுத்து கல்லறை மண்டபப் பாறைக் கல்லிலும் புதிய கிறித்துவக் கோயில் கல்வெட்டிலும் பதிவாகியுள்ளன. -

16. ஆங்கிலேயர்

ஆலந்தரிடமிருந்து நாகையைக் கைப்பற்ற ஆங்கிலேயர் தம் படையாலும் மராத்தியர் துணையுடனும் புகுந்தனர். அவர்தம் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தாரும் நாகையில் அமர்ந்தனர். அவர்தம் ஆட்சி நேர்ந்ததும் துணை மாவட்ட ஆட்சியர் நிலையிலும் அறமன்ற நடுவர் நிலையிலும் மேலும் சில குறிப்பிடத்தக்க அலுவற் பணியிலுமாக ஆங்கிலர் பலர் இடம் பெற்றனர். அவர்தம் குடும்பத்தாருடன் இடம் பெற்றனர். சில இடங்கள் மன்னர்களின் பெயர்க்குறிப்புகள் இதனை அறிவிக்கின்றன. ஆங்கிலருடன் சட்டைக்காரர் எனப்பட்ட ஆங்கிலோ இந்தியர் குடும்பங்கள் நாகையில் சற்றுப் பரவலாகவே வாழ்ந்தனர். ஆயினும் பிரித்தானிய ஆங்கிலேயர் நாகைப் பொதுமக்களுடன் பழகியவர் அல்லர். கிறித்துவக் கோயிலுக்குத் தொழுகைக்கு வருவதிலும் ஒதுக்கமே காட்டியுள்ளனர்.

துரை, துரைசானி என்று ஐரோப்பியரைப் போற்றியும் அவர்களைக் கண்டு பயந்தும் வாழ்ந்தனர் நகரத்துமக்கள்.

இருப்பினும் அவர்தம் நல அமைப்புகள் அவரைப் பெருமைப் படுத்தியதில் நமக்கு நலன் கூடியதாகக் கொள்ளலாம். ஆங்கில மொழி

அவர்தம் மொழி ஆங்கில மொழி. அவரால் மட்டுமன்றித் தமிழ் அலுவலர் தொடங்கி அனைத்து வணிகர்களாலும் பேசவும் எழுதவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/208&oldid=585089" இலிருந்து மீள்விக்கப்பட்டது