பக்கம்:நாகப்பட்டினம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 191

பட்டு இன்றளவில் ്ധിജ്യമേ தன் கலப்பால் குலைக்கும் அளவில் வளர்ந்துள்ளது.

17. கன்னட வழியினர்

கன்னட நாட்டார் கருநாடர் எனப் பெற்றனர். அவர் திராவிட இனத்தவர். நாகையில் இம்மக்கள் அமைந்ததாகச் செய்தியே இல்லை. ஆனால் அவர் வழியினரான ஒட்டர் என்பார் கூலிப் பணி கருதியும். சக்கிலியார் என்பார் தொழில் கருதியும் எங்கும் புகுந்து இடம் பெற்றதைப் போன்று நாகையிலும் இடம் பெற்றனர். இன்றும் உள்ளனர். அவர்தம் மொழி கொச்சைக் கன்னடம், எழுத்தில் இங்கு இல்லை. அவர்களிடமே அருகிய அளவில்தான் பேசப்படுகிறது.

18. குசராத்தியர்

18ஆம் நூற்றாண்டளவில் குசராத்து மாநிலத்து வணிகக் குடியினர் நாகை வணிகர்க்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்ய வந்தனர். தொடர்ந்து சிற்றுண்டிப் பொருள்களாகிய இனிப்புக் கடைகளை 'மிட்டாய்கடை என்னும் பெயரில் நடத்தினர். இதில் இன்னோர் தனிப்பெயர் பெற்றனர். மிகச் சில குடும்பங்களே நாகையிலும் நாகூரிலும் இடம் பெற்றன. "சேட்டுகள்" என்னும் குறியீட்டுப் பெயரில் குசராத்திய மொழி பேசுபவராக வாழ்ந்தனர். மிகச் சிறிய எண்ணிக்கையினர் தமிழ் மக்களுடன் ஒன்றிப் பழகினர்; பழகுகின்றனர். வங்கிக் கடன் வழங்குவது பெருகிவிட்ட மையால், வட்டிக்கடைத் தொழிலை நாகையிலும் கைவிட்டனர். வட்டிக்குக் கொடுத்தோர் மத்தியப்பிர்தேச மார்வாரியிலிருந்து வந்த மார்வாரிகள். அவர்கள் இப்போது நாகையில் இல்லை.

பன்னாட்டு நகர்

23 நூற்றாண்டுக்கால நாகை வரலாற்றில் நாகை பெற்ற மக்களாக 18 நாட்டுக் கணக்களவில் நோக்கினால் தாலமி குறித்தது பேர்ல் அவ்வப்போதும் பன்னாட்டு நகரமாகவே விளங்கியுள்ளது.

நாகை கண்ட மக்களை நாடு, இனம், குடி என்னும் வகைகளில் கண்டோம். மரபளவிலும் பண்பாட்டளவிலும் அவர்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/209&oldid=585090" இலிருந்து மீள்விக்கப்பட்டது