பக்கம்:நாகப்பட்டினம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 3

40 கி.மீ. தொலைவிலுள்ள பூம்புகாரில் வணிகம் செய்யச் சென்று வருவோர், சிந்தாறு என்னும் இவ்வூர்க் குறுக்கே ஓடிய ஆற்றங்கரையில் தங்குமிடம் (அகரம்) அமைத்து வாழ்ந்த மறையவர் என மக்கள் சிதறி வாழ்ந்தனர். ஆரவாரமில்லை; அமைதி செங்கோலாட்சி செலுத்தியது பேரூர்.

அக்காலத்தியக் கடல் கொந்தளிப்பால் ஒரு கிலோ மீட்டர் அளவிற்குக் கடல் புகுந்துள்ளது. இப்பொழுது இந்நகர் அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதி, அப்போது அருமையான மரங்கள் நிறைந்த தோப்பாக இருந்தது. எம் நாகநாட்டார் இங்கு வந்தால் அந்தத் தோப்பில்தான் தங்குவர். அப்பகுதியில் எம் நாட்டவர் ஒரளவினர் வணிகம் கருதியும், புத்தச் சமயம் கருதியும் நிலைப்பில்லாத குடில்கள் அமைத்துத் தங்கி வாழ்ந்தும் வந்தனர்'

இடையில் நான் ஒரு குறிப்பு வைத்தேன். 'என் தாத்தா கூறக்கேட்டுள்ளேன். அந்த இடத்திற்கு நாகர் தோப்பு என்று பெயர் உண்டாம்.

ஆ. புத்தத் திருவிடம் 'உன் பாட்டனுக்கு நன்றி. அவராவது ஒரு வரலாற்றுக் குறிப்பைச் சுட்டினாரே. அந்தத் தோப்பில்தான் அரசிளங்குமரியுடன் வந்த எம் சுற்றத்தார் மூன்று பாடிவீடுகள் அமைத்துத் தங்கினர். ஒரு தலையாய பாடியில் அரசிளங்குமரி தன். :ாள். ஓய்விற்குப் பினனர் ஊரின் உட்பகுதி நோக்கிப் புறப்பட்டாள். உடன் சிலரும் சென்றனர். செல்லச் செல்ல மேலும் அமைதி வாய்ந்த சூழலில் ஆழ்ந்து ஒதும் மந்திர ஓசை தெளிவாகிக் கொண்டே வந்தது.

"புத்தம் சரணங்கச்சாமி! சங்கம் சரணங்கச்சாமி!

தன்மம் சரணங்கச்சாமி! - - எனும் ஒன்றுபட்ட ஓசை உள்ளத்தில் படிந்து நெஞ்சை நெகிழ்வித்தது. அங்கு ஒரு மேட்டு நிலப்பகுதி அளவான பரப்பளவில் இருந்தது. அதனைச் சுற்றி இலந்தை மரங்கள் செறிந்திருந்தன. அவ்விடத்திற்குப் பதரி திட்டா என்று பெயர்.

1. பாளி மொழியில் பதரி என்றால் இலந்தை. இலந்தை செறிந்த மேட்டுநிலம் பதரி திட்டா எனப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/21&oldid=584903" இலிருந்து மீள்விக்கப்பட்டது