பக்கம்:நாகப்பட்டினம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 நாகபட்டினம்

"அதிபத்தர் பரதவத் தலைவர்" (23) என்று உமாபதிசிவம் பாடினார். அதிபத்தர் என்பது இயற்பெயர் அன்று. சிறப்புப் பெயராகும். இறையன்பாம் பக்தி தமிழ் உருவில் பத்தி எனப்படும். இறையன்புத் தன்மையைப் பத்திமை என்றனர். அதிகப் பத்தி கொண்டவர் என்னும் பொருளில் அதிபத்தர் என்று குறிப்பிக்கப்பெற்றார். மிகுதியாம் பண்பைக் குறிக்க அதி என்னும் அடைமொழி கொடுப்பர். அதிகச் சுவையுடன் பாடுபவர் அதிமதுரகவி எனப்பட்டார். அதிக வீரமுள்ளவர் அதிவீரராமர் எனப் பெயர் பெற்றார். - -

பத்தரையே "பத்தராய்ப் பணிவார்" என்று தொகையடியாருள் ஒரு தொகையடியராகப் பாடினார் சுந்தரர். அவரினும் சிறப்பாக 'அதிபத்தர்' என்று தனியாகக் குறிக்கப்பட்டமை கொண்டு இவர்தம் சிறப்பை உணரலாம். இவர் காலம் 7ஆம் நூற்றாண்டு.

மீன்பிடிக்கும் தொழில் கொண்ட இவர் ஒவ்வொரு நாளும் தம் வலையில் விழும் முதல் மீனைச் சிவபெருமானுக்குக் காணிக்கை யாகக் கடலில் விட்டு விடுவார். இதனைப் பொய்க்காது, ஒரு நோன் பாகக் கொண்டிருந்தார். பல நாள்கள் மீன் ஒன்றும் கிடைக்காத நிலையில் வறுமையில் வாடினார். இதனைக் கண்ட நம்பியாண்டார் நம்பி,

"நாகை அதிபத்தராகிய பொய்யிலியே" (24) என்று பொய்க் காதவராகச் சிறப்பித்தார். -

திருத்தொண்டர்களைத் தொகுத்த சுந்தரர் இவரை "நாகை அதிபத்தர்க் கடியேன்” எனற உயர்த்தி 63 தனியடியாருள் ஒருவராகக் கோத்தார். இதனை அடியொற்றிய திருத்தொண்ட புராண வரலாற்றிலும் இடம் பெற்றார். சேக்கிழார் தம் திருத்தொண்ட புராணமாம் பெரிய புராணத்தில் இவர் வரலாற்றை "அதிபத்த நாயனார் புராணம்" என்று 20 பாடல்களால் பாடினார்.

நாகையில் வாழ்ந்த சைவப் பெருமக்களின் முன்னோடி யானவர் அதிபத்தர். எளிய குடிமகனாகிய இவர் அரிய செயல் செய்த சைவச்சான்றோரானார். r

இடைக்காலத்தில் சைவத் தலைநகராக விளக்கம் பெற்று நாகையில் பூம்புகாரிலிருந்த சைவப்பத்தர் இங்கு குடியேறியிருப்பது தொடர்ந்து சைவம் புத்தத்தின் இடையேயும் பெருகியது என்பதை உணர்த்தும் ஏழாம் நூற்றாண்டில் பாடிய திருஞானசம்பந்தர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/214&oldid=585095" இலிருந்து மீள்விக்கப்பட்டது