பக்கம்:நாகப்பட்டினம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 м நாகபட்டினம்

திருமாலிய மக்கள்

அடுத்து வைணவமாம் திருமாலியம் சார்ந்த மக்கள் நாகையில் வாழ்ந்தனர். பிடிப்பான சமயப் பற்றுள்ள அன்னார் செளந்தரப் பெருமாள் கோயிலைக் கண்டு திருமாலியம் வளர்த்தனர். முற்காலச் சான்றோராகக் குறிக்க இயலவில்லையாயினும் பிற்காலத்தே பல சான்றோர் சமயஞ்சார்ந்த நூல்களை ஆக்கினர். தம்பெயர்களைத் திருமாலிய ஆழ்வார் பெருமக்களின் அடியவர்களாக ஆக்கிக் கொண்டு வாழ்ந்துள்ளனர். திரு முத்துக்கிருட்டின பிள்ளை இராமாநுசதாசர் என்றும் மற்றிருவர் ஆழ்வார்தாசர், வேங்கட விட்டலதாசர் என்றும் பெயர் சூட்டிக்கொண்ட திருமாலியப் பெரு மக்களாவர். (2.6)

நாகையில் திருமாலியம் சார்ந்தோர் பிடிப்புள்ள சமயத்தாராக வாழ்ந்தனர். இசுலாமிய மக்கள்

பிற சமயத்தாருள் அடுத்து இசுலாமியம் சார்ந்த மக்களைக் குறிக்க வேண்டும். 15 ஆம் நூற்றாண்டில் நாகூரில் இசுலாமிய விடிவெள்ளி இடம்பெற்றது. அச்சமயத்து இறையடியார் அசரத்து காதிறு அவர்கள் நாகை மண்ணின்மைந்தரல்லர். இப்பெரியார் தம் நாகூர் அருளிப் பாடுகளால் இசுலாமிய மக்கள் பெருகலாயினர். மற்றையோர்க்கும் அருளினார். 1558இல் அடக்கமாயினார். அடக்க இடமான தர்கா இசுலாமியத்திருவிடமாகியது. நாகை யிலும் இச்சுமயத்தார் பெருகினர். -

நாகையிலும் நாகூரிலும் இசுலாமியம் சார்ந்த மக்கள் தம் ஐந்து கோட்பாட்டு நெறியில் படிந்து மெளலானாக்களைத் தம் சமயப் இபருந்தகைகளாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

றித்துவ மக்கள்

அடுத்து, கிறித்துவ சமய மக்கள் போர்த்துகீசியர் காலத்தில் (17 - ஆம் நூற்றாண்டில் இடம் பெற்ற) குடும்பங்கள் ஆகிக் கிறித்துவக் கோயில்கள் அமையும் அளவு பெருகினர். குறிப்பிடத்தக்க கிறித்துவச் சமயச் சான்றோராக எவரையும் குறிக்க இயலவில்லை. என்றாலும் அச்சமயத்தில் சில பிரிவினர்களாக அள்ளித் தெளித்தது போன்று நாகை நகரில் வாழ்ந்து வருகின்றனர்.

சமயப் பணியின்றி ஒர் இதழ்ப் பணியைச் செய்த ஒரு கிறித்துவ அறிஞரை இங்குக் குறிக்கவேண்டும். நாகைப் புகைவண்டித் துறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/216&oldid=585097" இலிருந்து மீள்விக்கப்பட்டது