பக்கம்:நாகப்பட்டினம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 199

அலுவலகத்தில் பணியாற்றிய திரு ஆலிவர் என்பார் ஓரளவில் வளவாழ்வுடன் வளமான அறிஞராகவும் வாழ்ந்தார். இவர் ஆங்கிலத்தில் நாகபட்டினம் இதழ் என்னும் பெயரில் ஒர் இதழைத் தொடர்ந்து வெளியிட்டார்.

அந்த இதழில் மாவட்டச் செய்திகள் பலவற்றைப் பதிந்துள்ளார். தஞ்சையில் இப்போதுள்ள இராசா மிராசுதார் மருத்துமனை அமைவதற்கு அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை அவ்விதழில் காணலாம். நாகைக் கலைபற்றியும், தொழில் பற்றியும் பல அரிய நிகழ்சிகளை வெளியிட்டார். அவ்விதழ்களின் தொகுப்பு நல்ல பதிவேடு ஆகும். இவர் நாகை நகராட்சித் தலைவராகவும் இருந்தார். இத்தாலியப் பயணி சீசர் ஃபெடெரீசி (Cesare Fedaic) "நாக பட்டினம் பெரிய நகரம். கிறித்துவர்கள் இங்கு மேம்பட்டிருந்தனர்; பெருந் தகவாக வாழ்ந்தனர்" என்றேழுதினார். - பெரியார் கொள்கையர்

சமய எண்ணத்தை ஒரு நோக்காகக் கொள்ளாமல் கடவுள் பற்றால் பெரும்பகுதி திருநீறு பூசி வாழும் மக்களும் உள்ளனர். அன்னார் இந்தக் கோயில் - அந்தக் கோயில் என்று பாராது தம் பார்வையில் படும் எந்தக் கோயிலைக் கண்டாலும் ஒரு முழுக் கும்பிடோ அரைக் கும்பிடோ போட்டு வணங்கிச் செல்வோராகவும் உள்ளனர்.

கடவுள் பற்றில்லாக் கடவுள் மறுப்பாளர்களாகத் திராவிட இயக்கத்தார் நாகையில் அவ்வப்போது இடம்பெற்று வாழ்ந்து வருகின்றனர். இன்னோர் பெரியார் ஈ.வே.இரா அவர்களது பகுத்தறிவுக் கொள்கை கொண்டோராக எச்சமயமும் சாராமல் சமயத்தைச் சாடி, "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்னும் வள்ளலார் கருத்தை ஒட்டியும் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர்.

இத்தனை வகையினர் இருப்பினும் சமயக்காழ்ப்பு இல்லா மக்களாகவே நாகையரைக் காண்கிறோம். இராமர் பிள்ளையார் வலைவீசுவதற்குப் வலையைப் பிடித்துள்ள சில குறுக்கீட்டாளர் இந்நாகை சமயப் பொதுமையான அமைதியைக் கெடுக்க முனைந்தனர். அப்படி செய்யாமல் நாகை மக்கள் தாக்குப்பிடித்துப் பொறுமையாக வாழ்வர்; வாழ்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/217&oldid=585098" இலிருந்து மீள்விக்கப்பட்டது