பக்கம்:நாகப்பட்டினம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாகபட்டினம்

அதில் புத்தத் துறவிகளின் ஒய்விடம் என்னும் விகாரை ஒன்றிருந்தது. அஃது அசோகப் பெருமன்னன் ஆணையால் எழுப்பப் பெற்றது. அதனைப் பதரி திட்ட விகாரை என்பர். அண்டையில் துறவிகளின் தொழுகை இடமாம் 'சைத்தியமும்', உலாவும் ஆராமமும் இருந்தன. அக்காலத்திலேயே இப் பதரிதிட்டையில் பேரறிஞர்கள் உறைந்தனர். புத்த நூல்களை ஆராய்ந்தனர். உரைகள் எழுதினர். அவர்களாலே இப்பகுதி வெளியே அறிமுகம் பெற்றது. இப் பகுதியின் பதரி திட்டை' என்பதே இவ்வூரின் பெயராகவும் குறிக்கப்பட்டது.

இவ்விடத்தை அடைந்த அரசிளங்குமரி புத்தரைத் தொழுதும், புத்தச் சான்றோரிடம் வாழ்த்தும் அறிவுரையும் பெற்றும் மீண்டாள். எம் நாட்டார் இப்பெருநாட்டின் புத்தத் திருவிடங்களுக்கு வந்து செல்வதுண்டு. இலங்கையில் உள்ள மணிபல்லவம் என்னும் நயினாத் தீவினர் இங்குள்ள பதரிதிட்டா, பூம்புகார் முதலிய திருவிடங்களுக்குத் தூய பயணமாக வந்து செல்வர். வாணிபம் கருதியும் வந்தனர்.

பாடி வீட்டுக்குத் திரும்பியதும் வடக்கு நோக்கிப் பயணம் தொடங்கியது. கடற்கரை ஓரமாகப் பூம்புகாருக்குப் புறப்பட்டோம். பூம்புகாரை நெருங்க நெருங்க எம் அரசிளங்குமரியிடம் ஒரு புதுப்பொலிவு - எதையோ அடைய இருக்கும் பூரிப்பின் முன்னோட்டம் தென்பட்டது. இதற்கு ஒரு காரணம் உண்டு."

'அஃதென்னவோ? - துடிக்காதே உரிய இடத்தில் உரைப்பேன். வைகறைப் போதில் பூம்புகாரை அடைந்தோம். விடிந்தால் காவிரிபுகும் பட்டினமாம் பூம்புகாரின் இந்திர விழாவின் இறுதி நாள் விழா. இவ்விழா சித்திரைத் திங்கள் முழு நிலவு நாளில் துவங்கி இருபத்தெட்டு நாள்கள் நிகழும். இருபத்தெட்டாவது நாள் வைகாசி முழு நிலவு நாளாகும். அன்று கடல் நீரில் விளையாட்டுப்போட்டிகள் நிகழும். வெளிநாட்டாரெல்லாரும் வருவர் கலைகள் கொழிக்கும்.

1. தன்மபாலா என்பார் குறிப்பிடத்தக்கவர்.

2. "உருகெழு உவவுத்தலை வந்தென

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு மடலவிழ் கானல் கடல் விளையாட்டு" - சிவிம்பு:6: 111-113.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/22&oldid=584904" இலிருந்து மீள்விக்கப்பட்டது