பக்கம்:நாகப்பட்டினம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 நாகபட்டினம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கீழை நாடுகளுக்கு, குறிப்பாக மலேயா, சிங்கப்பூர் பர்மா நாடுகளுக்குப் பயணிகள், கப்பல் வழிச் சென்றோர் தொடர்ந்து பெருகினர்.

தமிழகத்துப் பழங்குடியினரை ஆய்ந்த அறிஞர் எட்கர் தர்ஃச்டன் என்பார் தம் நூலில் வெளிநாட்டிற்கு நாகை வழியே சென்றோர் எண்ணிக்கையைப் பிற துறைமுக நகர்களுடன் ஒப்பிட்டு ஒரு கணக்கைத் தந்துள்ளார்.

1906ஆம் ஆண்டில் மட்டும்

மலேயா, சிங்கப்பூருக்குக் கப்பற் பயணிகளாகப் பிழைக்கச் சென்றோர் (தென்னிந்தியர் மட்டும்).

பாண்டிச்சேரி 55 பேர்

கடலூர் 588 பேர் போர்ட்டுநோவா 25.55 பேர் காரைக்கால் 3422 பேர் நாகை, நாகூர் 45,453 பேர் (29)

நாகை, நாகூர் வழியே சென்றோர் எண்ணிக்கை மற்றவருடன்

நோக்கும்போது எத்தனை மிகப்பெரிது என்பதை அறியலாம். இவருள் நாகை, நாகூர் மக்கள் மிகப்பலர். -

இவ்வாறு சென்றோருள் பெருவணிகர், சிறுவணிகர், பணியாளர், தச்சர் கொல்லர் முதலிய தொழிலாளிகள், படகுகள் கட்டுவோர், சங்கறுப்போர், மணிகோப்போர், கலங்களில் பணிபுரிவோர், ஆசிரியர் அடங்குவர்.

இன்றும் அவ்வந் நாடுகளில் தமிழ்க் குடிமக்கள் அவருள் நாகை மக்கள் மிகச் சிறு அளவிலும், தாய்லாந்து, மொரீசியசு நாடுகளில் பெருமளவிலும் குடியமர்ந்து அந்நாட்டு மக்களாகவே அந்நாட்டை வளப்படுத்துகின்றனர். பெரும்பாலோர் சென்று உழைத்துப் பொருளிட்டித் தாய் நகர் வந்து தம் நாகை நகரை வளப்படுத்தி யுள்ளனர். ::! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/222&oldid=585103" இலிருந்து மீள்விக்கப்பட்டது