பக்கம்:நாகப்பட்டினம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை - 20?

இவரைப் போற்றும் நினைவாக நாகை ஆரிய நாட்டுச் செட்டித் தெருவில் மா. சிங்காரவேலர் படிப்பகம் நிறுவப்பட்டுள்ளது. இவர் மீனவர் குலத்தவர்.

திரு அருணாசலம் பிள்ளை என்னும் வள்ளலார் அடியொற்றிய பெருமகன் வாழ்நாள் முழுமையும் வள்ளலார் புகழ் பரப்பி வாழ்ந் தார். "பெருநெறி பிடித்தொழுக வேண்டும்" என்ற அருட்பாவின் படி பசித்திருந்தும் தனித்திருந்தும் விழித்திருந்தும் வள்ளலார் அறிவித்த பதவி பெற்று வாழ்ந்தவர்.

வழக்கறிஞர் திரு விசயராகவலு நாயுடு வெளிப்பாளையத்தில் வாழ்ந்த தன்மானங் காத்த பெரியார். தந்தை பெரியார் வழிக் கொண்டவர். -- r

திரு. ஆர். வி. கோபால் அவர்களும் பெரியார் வழியில் பகுத் தறிவை நாகையில் பரப்பியவர்.

முதன்முதலில் இசைத்தட்டில் பாடியதால் பிளேட் வேங்கடராம ஐயர்' என்பார் நாகையில் வாழ்ந்த இசைப்பெருமகனார்.

இசைப்பெருமாட்டி திருமதி வசந்தகோகிலம் இசையுலகில் 'இசைக்குயில் எனப் புகழ் நாட்டிய மகளிர்குல இன்னோசை,

திரைப்படத்துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த திரைப்பட இயக்குநர் திரு கே. சுப்பிரமணியம் நாடகக் கலையை வளர்த்துப் பல நாடகப்பெருமக்களை உருவாக்கியவர்.

புலவர் மருத்துவர் திரு ப.மு. சொக்கலிங்கனார் எளிய மக்களுக்கு எளிய காசு பெற்றும், இலவயமாகவும் மருத்துவம் செய்தவர். இவர் சீர்காழி முத்துத் தாண்டவராயப் பிள்ளை மகனார். நாகூரில் வாழ்ந்த வழக்கறிஞர் திரு. சூரியமூர்த்தி செட்டியார் தமிழ் ஆர்வலர். நெஞ்சுரம் படைத்தவர். நாகூரில் தமிழ் மக்களுக்கு அரணாக விளங்கியவர். -

திரு தண்டபாணி செட்டியார் விறுவிறுப்பான செயல் திறத்து வணிகர். புதுமையாகச் செயலாற்றியவர்.

திரு.கே.பி. நடராசன் பொதுவுடைமை இயக்கத் தோழர். தஞ்சை மாவட்டமெங்கணும் இயக்கப் பணி செய்தவர். திருமணம் கொள்ளாது வாழ்ந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/225&oldid=585106" இலிருந்து மீள்விக்கப்பட்டது