பக்கம்:நாகப்பட்டினம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驾盘姆 நாகபட்டினம்

வாயிலிலும் நின்ற தோற்றத்தில் அரசியல் பண்பாட்டை நினை வுறுத்தும் சின்னங்களாக நிற்கின்றன.

நாகைப் பெருமகனாராக வாழ்ந்த திரு.வே.ப.கா. காயா ரோகணம் பிள்ளை அவர்களது மார்பளவுச் சிலை அனைத்து இணக்க மன்றம் (Casmopolion Club) முகப்பில் காட்சியளிக்கிறது. முன்னாள் நகராட்சி தலைவர் திரு. அ.மு.பொ. திருவம்பலம் செட்டியார் அவர்களது பெயரால் ஒரு சிறு நூலகம் நகராட்சி நூலகமாக இன்றைய மருத்துவமனை அண்டையில் இருந்தது.

பூங்காச் சின்னங்களாக நாகையில் வெளிப்பாளையம் புகை வண்டி நிலையத்திற்கு அண்மையில் சாலமன் பூங்கா, வெளிவையில் தம்பித்துரை பூங்கா உள்ளன.

இந்நூலாசிரியரின் தமிழ்ப் பணியையும், பொதுப்பணியையும் பாராட்டும் நோக்கில் வீடுவாய்ப்பற்றோர் சங்கத்தார் நாகை வெளிவையில் "இளஞ்சேரன் நகர்" என்னும் புறநகர்ப் பகுதியை உருவாக்கியுள்ளனர். இஃது எளிய புலவரையும் பாராட்டும் நாகை மக்களின் பெருந்தகவான சின்னமாகும்.

நாகையைச் சார்ந்த பொய்யூரில் தமிழ்ச் சித்தர்களில் ஒருவரான கோரக்கர் வந்து தங்கிப் போனதன் திருக்குறியாக அவர்தம் திருவடி வடிவமைத்த நினைவிடம் உள்ளது.

அழகு முத்துப் புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/228&oldid=585109" இலிருந்து மீள்விக்கப்பட்டது