பக்கம்:நாகப்பட்டினம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை

அந்நாள் அளவில் மூன்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த விழாவில் மாதவியும் கோவலனும் அக்கடற்கரைக் கானலில் 'கானல் வரி பாடி மனப்பூசலால் பிரிந்தனர்.

இப்பெருவிழாவைக்கண்டு களிக்க வேண்டும்; புகாரில் அமைந்த புத்தச் சான்றோர்களைக் கண்டு அறவுரை பெற வேண்டும். இவை எம் அரசிளங்குமரி பீலிவளையினுடைய வருகையின் தெளிவும் வெளிப்படையுமான நோக்கமாகும்.

'அவ்வாறானால் புலப்படாததும், குறிப்பான நோக்கமும் உண்டோ - என்று இடைவெட்டுப் போட்டேன். இருக்கலாம், பொறுமையாகக் கேள்!' - என்றது. நான் மற்றொரு முனையான வினாவை எழுப்பினேன். ஓர் ஐயம்! ஒரு வெளிநாட்டு அரசிளங்குமரி - அதிலும் கன்னிப்பெண் பெற்றோர், உற்றார் துணையின்றி இவ்வாறு நாடுவிட்டு நாடு வருவதுண்டோ?

"அந்தக் காலம் மாந்தர் இயல்பும் நாகரிகமும் மணிமுடி சூடித் திகழ்ந்த காலம் - என்று மறு போடு போட்டு மேலே தொடர்ந்தது.

'அத்துடன் பீலிவளை இவ்வாறு வந்ததற்குத் தனி அடிப்படை உண்டு. மேலே கேள்! கதிரவன் விடியலை அறிவித்துக் கொண்டிருந்தான். புகாரை அடைந்தோம். விழா நிகழ்ச்சிகளைக் காலை முதல் முழுநாளும் கண்டோம். புத்தச் சான்றோரை வணங்கி வாழ்த்தைப் பெற்றாள். அங்கு வெளிநாட்டுப் பெருமக்கட்கென அமைக்கப்பட்ட வளமனையில் தங்கினோம். மறுநாள் அங்கமைந்த 'இந்திரவிகாரை" முதலிய பெயர் பெற்ற புத்தக்கோட்டங்களைக் கண்டு தொழுது முற்பகலைக் கழித்தோம். பிற்பகல் மாலையில் இவ்விடம் நோக்கித் திரும்பினோம் விதை ஊன்றப்பட்டது

அன்றையப் பகலிலும் முன்நாளும் அரசிளங்குமரி சோழ அரசகுலத்தாரையோ அலுவலர்களையோ கான நேரும்போது அவர்களிடம் ஏதேதோ உசாவினாள், கரையோரமாக எம் சிறுகலம் வந்தாலும் பீலிவளையின் ஆர்வப்பார்வை கரைப்பகுதியை

1. இவ்விகாரை அசோகப் பெருமன்னனால் எழுப்பப்பெற்று. அவர் மகன், மகேந்திரனால் விரிவு படுத்தப்பட்டது. பின்னர் மகேந்திர விகாரை எனப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/23&oldid=584905" இலிருந்து மீள்விக்கப்பட்டது