பக்கம்:நாகப்பட்டினம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 நாகபட்டினம்

நாகையில் புத்தச் சிறப்பு

யுவான், இத்சிங், ஊசிங், சீஅங் முதலிய புத்தச் சார்பினர் பயணிகளாக நாகைக்கு வந்துள்ளனர். அனைவரும் நாகை மண்ணில் புத்தம் இருந்ததைச் சிறப்பாகக் குறித்துள்ளனர்.

ஆனாலும் சீனப்பயணி யுவான்சுவாங் (629 - 645) நாகையில் புத்தம் பல்லவர் காலத்தில் கீழ்நிலை அடையத் துவங்கிவிட்டது. என்று குறித்துள்ளார். அவ்வாறு துவங்கியிருப்பினும் கி.பி. 716 இல் இரண்டாம் நரசிம்மன் புதுவெளிக்கோபுரத்தை எழுப்பினான் என்னும் செய்தியால் முன் இறக்க நிலை தொடங்கிப் பின்னர் பல்லவன் துணையால் சற்று ஆக்கம் பெற்றது போலும் என்று Glassrefremountb. -

புத்தமும் சைவமும்

ஆயினும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலங்களில் நாகைப் புத்தம் தாக்கம் பெறவில்லை. பொதுவாகவே இருவரும் புத்தத்தையும், சமணத்தையும் தாக்கிப் பாடியுள்ளனர். இருவரிலும் ஞானசம்பந்தர் மதுரையில் சமணரை வாதில் வென்று அவர் அழியக் கரணியமானவர். மேலும் திருநள்ளாற்றிலிருந்து சென்ற இவரைப் போதிமங்கையிலிருந்த புத்தநந்தி எதிர்த்தார். ஞான சம்பந்தரின் பாடல்களை ஏட்டில் எழுதிவந்த சம்பந்த சரணாலயர் என்பார் தேவாரத்திலுள்ள "அத்திரமாவது அஞ்செழுத்துமே" என்பதைச் சொல்லி அவர் தலையறுந்துபோகச் செய்தார் என்பர். தொடர்ந்து சத்திர மண்டபத்திலே தங்கியிருந்த ஞானசம்பந் தரைச் சாரிபுத்தன் என்பான் எதிர்க்க அவனுடன் வாதாடிப் பணியவைத்துச் சைவனாக்கினார். ஆனால், புத்தம் பெருகியிருந்த நாகைக்கு அவர் வந்தபோது புத்தர் எதிர்ப்பு இல்லை. க்ரணியம் இங்கிருந்தோர் மதம் பரப்பும் செயலில் இல்லை. மேலும் ஞான சம்பந்தரும் அவர்களைப் பற்றிய கவனம் கொண்டதாகவும் இல்லை. எனவே, ஏழாம் நூற்றாண்டுவரை நாகையில் புத்தம் வளமாக இருந்துள்ளது. பொன்சிலைத் திருட்டு

ஆனால், எட்டாம் நூற்றாண்டில் திருமாலியத்தார் புத்தரை மிகவும் சாடிப்பாடியுள்ளார். தொண்டரடிப் பொடியாழ்வார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/238&oldid=585119" இலிருந்து மீள்விக்கப்பட்டது