பக்கம்:நாகப்பட்டினம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 223

விகாரை இருந்ததைக் குறித்துள்ளார். அது கிழக்கே இருந்தது' என்றும் குறித்தார். கிழக்கு என்பது அக்காலத்தில் ஓரளவில் நிலைத்திருந்த புதுவெளிக் கோபுரத்திற்குக் கிழக்கு ஆகும். அவர் குறிப்பில் கோபுரம் என்னும் பொருள் குறிப்பு இல்லை. எனவே அது 'சூளாமணிவிகாரையைக் குறிப்பதாகும். அதில் கல்வெட்டு இருந்ததைக் குறிக்கும் அவர் அதனைச் சீனமொழிக் கல்வெட்டு என்று குறிக்கவில்லை. எனவே, அவர் காலத்தில் சூளாமணி விகாரை இருந்தது. ஆனால் சூளாமணி விகாரை பற்றி ஆனை மங்கலம் செப்பேடு குறித்த சிறப்பான அமைப்பில் இருந்திருந்தால் மார்க்கபோலோ ஒரு குறிப்பாவது எழுதி வைத்திருப்பார். எனவே, இந்நூற்றாண்டளவில் சூளாமணி விகாரை தனக்குரிய சமயச் சிறப்பில் இல்லை. சில சிதைவுகளையும் பெற்றதாயிற்று. இது நாகையில் புத்தசமயம் இறக்கம் கொண்டதற்கு மற்றொரு அடையாளமாகும்.

அடுத்து நமக்குக் கிடைக்கும் செய்தி பர்மா நாட்டு நகரிலமைந்த கல்யாணி நகர்க் கல்வெட்டு அறிவிப்பதாகும். கி.பி. 1473இல் அமைந்த இக்கல்வெட்டு நாகையில் புத்தப் பள்ளி இருந்ததைக் குறிக்கிறது. அப்பள்ளிக்குப் "பத்திசாராமம் என்று பெயர் குறிக்கிறது. பத்தி - இலந்தை - இலந்தை பெயரிலமைந்த இடம்; அது "பத்ரிச" என்றாகி ஆராமம் என்னும் புத்தப்பள்ளிச் சார்பான சொல் சேர்ந்து "பத்ரிசாராமம்" எனப்பட்டது. எனவே இது சூளாமணி விகாரையைக் குறிப்பதே; அதனுடன் இருந்த புதுவெளிக் கோபுரத்தை அன்று. அவ்வாறாயின் பெருவழக்காயிருந்த கோபுரம் என்று காட்டியிருக்கும். எனவே, 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் நாகைச் சூளாமணி விகாரை இருந்துள்ளது. ஒரு வளர்ச்சி - மறு தளர்ச்சி

இவ்வாறு ஓரளவில் புத்தம் படிப்படியாக இறக்கம் பெற்று வந்ததற்கு நாகை காரோணம் என்று ஆகிச் சைவம் பெருகியதே யாகும். குலோத்துங்கசோழர்காலத்தில் வெளிப்பாளையம தோன்றி விரிந்தது. "சோழகுலவல்லிபட்டினம் ஆனதையும் கண்டோம் இதனால் புத்த வளாகம் சுருங்கியது. சைவக் கோயில்கள வளர்ந்தன. திருமாலியக் கோயிலும் உருவாயிற்று. சைவம் மக்கள் சமயமாயிற்று. சைவத்தார் வேண்டுமென்றே புத்தத்தைக் குறைக்கவோ சிதைக்கவோ முயலவில்லை. என்றாலும் சைவத்தின் வளர்ச்சி புத்தத்தின் தளர்ச்சிக்குக் கரணியமாயிற்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/241&oldid=585122" இலிருந்து மீள்விக்கப்பட்டது