பக்கம்:நாகப்பட்டினம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 . நாகபட்டினம்

மக்கள் சமயமாகிய சைவம் கேடு சூழவில்லை என்றாலும் அயல்நாட்டுச் சமயமாக ஆட்சியின் வலுவில் நுழைந்த கிறித்துவம் புத்தத்தைக் குலைக்கவும் அறவே அழிக்கவும் கரணியமாயிற்று.

17ஆம் நூற்றாண்டில் நாகையில் இடம்பெற்ற (1658 இன் முன்னர்) போர்த்துகீசியர் மற்றைய மதத்தார்பால் கடுமையாக நடந்துகொண்டனர். சில புத்தர்களைக் கொன்றதாகவும் செய்தி உண்டு. எனவே, இக்காலத்திய புத்தம் சிதைவின் முனைக்கு வந்துவிட்டது என்று கொள்ளலாம்.

அடுத்து வந்த ஆலந்துக்காரர். 18ஆம் நூற்றாண்டிலும் இருந்தனர். அன்னார் சூளாமணி விகாரையில் இருந்த ஆனைமங்கலம் செப்பேடுகளைத் தம் நாட்டுக்குக் கொண்டு சென்று இலெய்டனில் வைத்தனர் என்றறிந்தோம். அதனால் அச்செப்பேடு கள் தம் உரிய பெயரை இழந்து பொருத்தமில்லாப் பெயரைப் பெற்றன. செப்பேடுகள் எடுத்துச் செல்லப்பட்டன என்றால் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சூளாமணி விகாரை தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது:என்றே பொருள். புத்த சமயமே நாகை மண்ணில் அற்றுப் போயிற்று.

ஆனால் சூளாமணி விகாரைக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னன் துணையுடன் எழுந்த புதுவெளிக் கோபுரம்" சூளாமணி விகாரைக்குப் பின்னரும் இருந்தது.

இஃதும் அழிவதற்குக் கிறித்துவக் குருமார் முயன்று வெற்றி கண்டனர். இவ்விவரங்களையும் கோபுரம் பற்றிய விளக்கத்தையும் அரசுக் குறிப்புகளால் அறிய முடிகிறது.

அரசின் குறிப்பின்படி 1846இல் இக்கோபுரத்தின் புகைப்படமும் வரைபடமும் உருவாக்கப்பட்டன. இவற்றைப் பெற்ற சென்னை ஆங்கில அரசு 11-10-1858 இல் கோபுரத்தின் நிலை பற்றிய விவரத்தின் அறிக்கையை அனுப்புமாறு தஞ்சயிலிருந்த ஆட்சியர் காப்டன் எஃப் ஒக்சு என்பாருக்கு எழுதியது. அவர் தந்த அறிக்கையால்தான் (7) புதுவெளிக் கோபுரத்தின் அமைப்பையும் அது சிதைந்து நின்ற விவரத்தையும் பின்வருமாறு அறிய முடிகின்றது.'

1. அரசுத் தொடர்பான இவ்வறிக்கைகளின் படிகளையும் புதுவெளிக் கோபுர படத்தையும் வழங்கி உதவியவர் பேராசிரியர் அ.சிவசங்கரன் அவர்கள். கும்பகோணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/242&oldid=585123" இலிருந்து மீள்விக்கப்பட்டது