பக்கம்:நாகப்பட்டினம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 நாகபட்டினம்

திருந்தால் அதனைக் கடற்கரைப் பகுதியில்தான் அமைத்திருப்பர். ஒரு புத்த சமயத்து மன்னன் புத்த வளாகத்திற்குள் அதிலும் சமய வளாகத்தில் எடுக்க வேண்டியிருக்க மாட்டான். இம்மணனின் சமயத்தவனான பல்லவனும் வெளியில் எடுத்திருப்பான். .

எனவே இக்கோபுரம் ஒரு புத்த சமயக் கோபுரமேயாகும். அதே போதில் இது கலங்கரை மாடமாகவும் பயன்பட்டது. கலங்கரை விளக்கம் என்பதற்கு இதற்கு மேலே விளக்கு அமைப்போ, ஏறுதற்குப் படிகளோ அமைக்கப் பெறவில்லை என்பதையும் கருத வேண்டும். மேலும் இக்கோபுரக் கூரையின் பக்கப் பிதுக்கங்களில் புத்தத் தொடர்புக் கலையமைந்த சிற்ப வேலைப்பாடுகள் இருந்துள்ளன. அனைத்திற்கும் மேலாக ஒரு புத்தர் சிலையும் இதிலிருந்து எடுக்கப் பெற்றுள்ளது. எனவே முடிவாக இது புத்தசமயக் கோபுரமே என்று கொள்ள வேண்டும். .

நிலவறை

இந்த இடிப்பால் ஒரு தடயம் கிடைத்தது. இதனை இடித்தபோது இதன் கிழக்கே சற்று அண்மையில் ஒரு தொன்மையான இலுப்பை மரம் இருந்தது. கட்டடம் எழுப்பக் கருதி இம்மரம் வெட்டப்பட்டது. வேரைக் கெல்லும் போது இதன் அடியில் மூன்று அடி ஆழத்தில் ஒரு நிலவறை காணப்பட்டது. இந்த நிலவறையில் கலையழகு மிக்க அழகான 5 புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. -

இந்த நிலவறைதான் முன்னர் பர்மா நாட்டு மன்னன் இலங்கைக்கு அனுப்பிய துறவிகளும் துதனும் வங்கக் கடலில் புயலால் வீழ்ந்து கரையேறி வந்து தங்கிய இடமாகும்.

இந்த நிலவறை சூளாமணி விகாரையை ஒட்டியோ சூளாமணி விகாரையின் அடியிலோ அமைக்கப் பட்டதாகும். பல புத்தப் பள்ளிகளில் நிலவறை அமைக்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் கருவறையிலோ கருவறையை ஒட்டியோ நிலவறைகளும் சில கோயில்களுக்கு மன்னர் வந்து போகச் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்படுவதுண்டு. மன்னார்குடிப் பெரிய கோயிலில் கருவறையை ஒட்டிச் சுரங்க அறை உள்ளது. இதில், நான்கு கீழ் அடுக்குகளாக நீண்ட கூடங்கள் உள்ளன. கீழ் நான்காவது அடுக்கில் ஒரு மூலையில் ஒரு வாயில் மேல் கருங்கல்லில் இராசராசன் திருவாயில் என்று வெட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/246&oldid=585127" இலிருந்து மீள்விக்கப்பட்டது