பக்கம்:நாகப்பட்டினம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நாகபட்டினம்

நாகை இருக்கிறது: சூளாமணி விகாரை இல்லை. விகாரைக்கு வழங்கப்பட்ட அறக்கட்டளை ஊராம் ஆனைமங்கலம் இருக்கிறது; அதற்குரிய நிலங்களும் விளைகின்றன; அறக்கட்டளை செயற்படுத்தப் புடவில்லை. அறக்கட்டளையைப் பதிந்த செப்பேடுகள் இருக்கின்றன; அவற்றின் இயற்பெயர் போய் இலெய்டன் பெயர் பெற்றுள்ளன.

நாகை மண்ணில் 21 நூற்றாண்டுகள் இருந்த புத்தம் சுவடற்றுப் போயிற்று.

இ. நாகையில் சைவம்

சமைக்கப்பட்ட சமயங்களில் ஒன்றிரண்டு அன்றி மற்றவற்றைச் சமைத்த முதல்வரை அறிகின்றோம். தீர்த்தங்கரர் சமணத்தையும், புத்தர் புத்தத்தையும், ஏசுகிறித்து கிறித்துவத்தையும். முகம்மது நபியவர்கள் இசுலாத்தையும், கன்பூசியசு கன்பூசியத்தையும் சமைத்தனர். இவ்வாறே பிறவும். சைவ சமயத்தைச் சமைத்த முதல்வரைக் குறித்துச் சொல்ல முடியாதபடி அதன் தொன்மை உள்ளது. சைவ மூலவர் சிவபெருமான். சைவம் - முதற் சமயம்

தமிழர் இயற்கையாம் கதிரவனை வணங்கத் தொடங்கினர். கதிரவனின் வெப்பம், நிறம் இவற்றின் பங்காகிய நெருப்பை வணங்கினர். இரண்டின் செம்மை நிறத்தையும் கொண்டு 'செம்மையன் என்னும் சிவன் பெயரைக் கொண்டனர். சைவ இலக்கியங்களில் சிவபெருமான் "தீவண்ணன்" என்று பாடப் படுவதைக் காணலாம். .

நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளாரும் தீப்பிழம்பான சூரியனில் சிவனைக் கண்டு தமிழர் வழிபட்டனர் என்றும், நெருப்பின் சிவந்த நிறம் சிவன் என்றும் அந்நெருப்பின் நடுவே காணப்படும் நீல நிறமே உமையம்மை என்றும் எழுதினார். எனவே சைவசமயத்தின் தொடக்கால வணக்கநிலை தீவணக்கமாகவே இருந்தது

தமிழ் மாந்தர் வாழ்வில் வீரங்காட்டி இறந்தவனுக்கு நடுகல் நட்டனர். அதனையே பரவித் தொழுதனர்.

"கல்லே பரவின் அல்லது

நெல்உகுத்துப் பரவும் தெய்வமும் இலவே" (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/248&oldid=585129" இலிருந்து மீள்விக்கப்பட்டது