பக்கம்:நாகப்பட்டினம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 - நாகபட்டினம்

தான் தோன்றி இவ்வாறு சூரியன், நெருப்பு இவற்றின் கோட்பாட்டில் உருவகம் பெற்ற இலிங்கம், "தான்தோன்றி இலிங்கம்" என்று சைவத் தமிழ் மண்ணில் வழங்கப்பெற்றது. தமிழ் மண்ணில் மூலச் சமயமாகவும் உரிமைச் சமயமாகவும் சைவம் வளர்ந்தது.

"தான்தோன்றி இலிங்கத்தை" அறிந்த வடமொழியார் தம் மொழி யில் "சுயம்புலிங்கம்" என்றனர். "விடங்கர்" என்னும் சொல்லையும் கையாண்டனர். "டங்கம்" என்னும் வடசொல்லுக்குச் சிற்பம் செதுக்கும் சிற்றுளி என்று பொருள். விடங்கர் - சிற்றுளியால் வடிக்கப் படாதவர் என்றாயிற்று. இவ்வாறான விடங்கர் சிறப்பாக ஏழுநகரங்களில் உளர். இவ்வூர்கள் "சப்த (ஏழு) விடங்கத் தலங்கள்" எனப்படும். இவ்வேழுள் நாகை ஒன்று.

"சீரார் திருவாரூர், தென்நாகை, நள்ளாறு, காரார் மறைக்காடு, காறாயன், - பேரான ஒத்த திருவாய்மூர், உலந்ததிருக் கோளிலி சத்த விடங்கத் தலம் (12) விடங்கர் சிவபெருமானைக் குறிக்கும். நாகை விடங்கர் "அழகிய விடங்கர்" எனப் பெற்றார். திருக்கோளிலி - திருக்குவளை.

சைவக் கோட்பாடுகள் -

ஏறத்தாழ இரண்டாம் நூற்றாண்டிற்குப்பின் அஃதாவது பூம்புகார் அழிந்தபிறகு-(அதற்கு முன்னரே நாகை புத்தக் களமாக ஆகியிருந்ததால் அதற்குப் பின்னர்தான்) நாகையில் சைவக் கோயில் சிற்றளவில் அமைந்தது. பெரிய வெட்ட வெளி வளாகத்தில் ஒரு மரத்தடியில் அருவுருவ (இலிங்க) வழிபாடு தொடங்கியது. இந்நிலையில் சைவம் இயற்கைப் பாங்குடைய வழிபாட்டிலும், கோட் பாட்டிலும் இருந்தது.

நான்கு ஐந்தாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இக்கோட்பாடுகள் பெருகின; வகைப்பட்டன. வடவர் கோட்பாடு களும் வடமொழி நூல் ஆழிகளும் புகுந்தன.

சைவம் அகச்சைவம், அகப்புறச் சைவம், புறச்சைவம், புறப்புறச் சைவம் என நான்கு வகைப்பட்டது. சைவ ஏணிப்படிகள் எனப்படும் 24 சோபானங்கள் விரிந்தன. இச் சோபானங்களைச் சிவபெருமானே ஏற்படுத்தினார். ஏணிப்படிகள் 19 முதல் 24 வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/250&oldid=585131" இலிருந்து மீள்விக்கப்பட்டது