பக்கம்:நாகப்பட்டினம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 - நாகபட்டினம்

"............ (Barriostără கந்தரை முழுதும் நோக்கிக் கண்காணித்து நாமம் சுந்தரவிடங்கர் என்று சொல்லி" (13)

என்று பாடினார். . கிணற்றுக்கல்

கருவறையண்மையில் சிறப்புமிக்க ஓர் அருவத் திருவுருவம் இருந்தது. இது பெரிய அளவிலான ஒரே கோமேதகக் கல்லுருவம். இது மிக ஒளியும் அழகும் வாய்ந்தது. பளபளப்பாகத் தேன் போன்ற நிறமுடையது. இதற்கும் வழிபாடு செய்தனர். இவ்வழிபாட்டில் சூட ஒளியேற்றும் வழிபாட்டை இவ்வுருவத்தின் முன்பக்கத்தில் செய்வ தில்லை. பின்புறம் நின்றே செய்தனர். இதன் பின்புற ஒளி வீச்சில் மருத்துவத்திற்குரிய கதிரொளி வீசியதாம். அதனால் பின்னே செய்த தாகச் சொல்வர். இது கோடி வெண்பொற்காசுகளுக்கு மேலும் மதிப் புடையது. இது கடந்த ஆண்டு களவு போயிற்று. கடவுளாக இருந்த கோமேதகத்தைக் கல்லாகவே கொண்டு கள்வன் கொண்டு சென்றான். களவும் கண்டுபிடிக்கப்படாமல் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. தான்தோன்றி உரு எது?

இக்கோமேதகத் திருவுரு இயற்கையில் விளைந்தது. உளியால் வடிக்கப்படாதது. எனவே, இதனையும் 'விடங்கர் என்றனர். அழகு சிறக்கும் இஃது அழகு விடங்கர் எனத் தக்கதாகவும் கருதப்பட்டது. ஆனால், திருநாகைக் காரோணத்தைப் பாடிய பிள்ளையவர்கள் இது பற்றிக் குறிப்பிடவில்லை.

தானே தோன்றியது. விடங்கர் எனும் வரம்பில் முன்கண்ட சோமாஃச்கந்தர் அடங்காது. அதனைத் தேவதச்சன் மயன் உருவாக் கினான் என்றனர். அவன் கம்மியன். ஆனால் அவன் உளிகொண்டு செய்வதில்லை என்பர். இது புராணக் கதையாகவும் உள்ளது. -

பொதுவில் இயற்கைத் தோற்றத்தில் அருவுருவங் கொண்டதையே விடங்கர் என்று கொள்ள வேண்டும். இதன்படி நோக்கினால் மூலவரான திருவுருவமே தான்தோன்றியான விடங்கர் எனப்படலாம். இவரே காரோனர் எனப்படுபவர். கோயில் அமைப்பில் கருவறைக்கு அண்மையில் அம்மன் அமர்ந்துள்ளார். அம்மனின் பெயர் கருந்தடங்கண்ணி. இவ்வாறே தேவார மூவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/256&oldid=585137" இலிருந்து மீள்விக்கப்பட்டது