பக்கம்:நாகப்பட்டினம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 23.9

பாடியுள்ளனர். ஆனால் மாற்றுப்பெயராகத் தோன்றிய நீலாய தாட்சி என்பதே வழக்கில் உள்ளது. பெண் மக்களுக்குப் நீலாய தாட்சி என்றே பெயர் சூட்டுகின்றனர். கருந்தடங்கண்ணி என்னும் அழகிய பெயர் ஏட்டோடு நிற்கிறது.

சிவன் கோயில்களில் இன்றியமையாது அமையும் கூத்தரசன்

திருவுருவமும் தனித்திருமுன்னும் உள்ளன. 63 சைவ அடியார் களின் திருவுருவங்கள் திருச்சுற்றில் உள்ளன. முன் குறித்தது போன்று அனைத்துக் கடவுளரின் திருவுருவங்கள் அமைந்துள்ளன. மூவர் பாடல் நகர்

இத்தகு சிறப்புடைய நாகைக் காரோணம் பாடல் பெற்ற கோயில், நாகை பாடல் பெற்ற நகர். தேவார மூவரும் பாடியயுள்ளனர். சோழ நாட்டுத் தேவாரத் திருவிடங்கள் 190. அவற்றுள் காவிரியின் தென் கரையில் உள்ளவை 127. இவற்றுள் குறிப்பிடத்தக்கது நாகைக் காரோனம். திருநாவுக்கரசர் 4 பதிகங்கள் - 41 பாடல்கள் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள் - ஒவ்வொன்றும் கடை காப்புப் பாடல் ஒவ்வொன்றுடன் 22 பாடல்களை இசைத்துள்ளார். திருநாவலூரர் எனப்பட்ட சுந்தரர் 1 பதிகம் ஒரு கடைகாப்புப் பாடலுடன் 11 பாடல்களைப் பாடியுள்ளார். அப்பர் வாய்மொழி அந்தண் நாகை:

நாவுக்கரசருட்ைய பாடல்துறைகளில் திருத்தாண்டகம் குறிப் பிடத்தக்கது. அவர் தாண்டகவேந்தர்' என்று சிறப்பிக்கப்படுபவர். அதனில் 4ஆவது பதிகமும் பிற திருநேரிசை, திருவிருத்தம், திருக் குறுந்தொகை என உள்ளன. திருநேரிசையில் "காரோணத்தானை, ஐயனை, ஒருத்தனை" என்றெல்லாம் பாடல்தோறும் அடுக்கி "உய்ந்த வாறே, களித்தவாறே, பிறந்திலாரே என்று வினை முடிவுகளால் நிறைவேற்றியுள்ளார். திருவிருத்தத்தில் பாடல்தோறும் காரோனனே, காரோண" என்று விளித்துப் பாடியுள்ளார். பன்னி ரண்டு பதிகங்களிலும் நாகையரின் கல்விச் சிறப்பைத் திருக்குறுந் தொகையில் "வினை ஒயுதே, வினை கழலுமே, நீங்குமே, சோருமே, இல்லையே, மாயுமே, கெடுந்துயர் திண்ணமே, தீவினை தீருமே" என ஒவ்வொரு பாடலையும் ஒரே அமைப்பில் வினை முடிவு செய்துள்ளார். திருத்தாண்டகம் சொற்சுவை, பொருட்சுவை காட்சிச் சுவை கொண்ட பாடல்களை உடையது. ஒவ்வொரு பாடலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/257&oldid=585138" இலிருந்து மீள்விக்கப்பட்டது