பக்கம்:நாகப்பட்டினம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 243

கண்டிப்பும் போட்டார். "நீ இருந்த மலையைத் தூக்கிய இராவணன் பின்னர் பாடிய பாட்டைக் கேட்டுத் தேரும் வாளும் தந்தாயே. என் பாட்டுக்கும் கொடு" என்றார். இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு செல்ல, "காற்றனைய கடும்பரிமா ஏறுவதும் வேண்டும்" என்று சவாரிக் குதிரையும் வேண்டினார். -

மிஞ்சிப் பேசியது மட்டுமன்று; கெஞ்சியும் "மற்றார்ை. ? &#L யேன்" என்று நின்றுள்ளார். இவற்றை எல்லாம் பெற்றார் என்று சேக்கிழார் பாடியுள்ளார்.

வக்கணைச்சொற்கள் -

இவர் பதிகத்தில் கையாண்டுள்ள சில சொற்கள் அக்கால வழக்கி லிருந்தவையும், படைப்புச் சொற்களும், புதுமைச் சொற்களும் ஆகும். கிறிபேசி, பாண்பேசி (பகடிகள் பேசி), படிறுஆடி (வஞ்சம் பேசி) சேஏறி (காளை ஏறி), பகட்டு, சுவண்டு (வீண்), மிண்டாடி (மிடுக்காக) , வினைக்கேடு (இக்காலத்தில் மெனக்கேடு எனப் படுவது) காம்பினொடு நேத்திரம் (கண்ணாடி), சொற்பாடு (தூது) என்பனவற்றை இப்பதிகத்தில் காண்கிறோம்.

ஒவ்வொரு பாடலும் "கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே" என்று நிறைவேறுகின்றது. "கடல் நாகை, காண்பினிய நெடுமாடம் நிறைந்த நெடுவீதி, செல்வக் கடில் நாகை" என்றெல்லாம் நகரைப் பாடியுள்ளார். இறுதிப் பாடல் கடைகாப்பாக, "அணிநாவலூரான் சொன்ன அருந்தமிழ்கள் இவைல்லார் அமருல காள்பவரே" என்று தன் முத்திரையுடன் முடிக்கிறார்.

அப்பர் பாடலைத் "தேவாரம்" என்றும், சம்பந்தர் பாடலைப் "பாசுரம்" என்றும் சுந்தரர் பாடலைப் "பாட்டு" என்றும் கூறுவது ஒரு மரபு. இம்மரபை நாகைக் காரோணம் பெற்றதும் சிறப்பாகும்.

ജൂങ്ങുഖങ്ങിLib இவ்வாறு சற்று வம்பாடி நடந்து கொண்டதால் "வன்தொண்டர்" எனப்பெற்றார்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டு எட்டாம் நூற்றாண்டுகளில் தேவார மூவர் பாடினர். ஒன்றை இங்கே அறிய வேண்டும். மூவர் பாடலிலும் முற்றும் இல்லை

சோமாஃச்கந்தர் என்னும் அழகிய விடங்கர் பற்றி முன்னர்க் கூறப் பட்டது. கோயில் அமைப்பைக் காட்டும் வரிசையில் அது முன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/261&oldid=585142" இலிருந்து மீள்விக்கப்பட்டது