பக்கம்:நாகப்பட்டினம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நாகபட்டினம்

கூறப்பட்டது. ஆனால், இந்த வழக்கும் கதையும் தேவார காலத்திற்குப் பிற்பட்டுப் புகுந்த வடமொழிப்புராணம் அறிவித்தவை.

மூவர் பாடல்களிலும் இதற்குறிய குறிப்பே இல்லை. பிற கதைகளாகிய இராவணன் கயிலையை எடுத்தமை, திரிபுரம் எரித்தமை, மால் நான்முகன் தேடியமை, பாற்கடல் கடைந்தமை, தக்கன் வேள்வி, காலனை உதைத்தமை, பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்தமை, யானைத்தோல் உரித்தமை முதலியவை மூவராலும் பாடப் பெற்றுள்ளன.

சிவபெருமான் உமையுடன் மங்கை பாகனாகக் காட்சி தருவதை மூவரும் பரவலாகவே பாடியுள்ளனர். ஆனால் நாகைக் காரோ ணத்தில் அமைந்த, முருகனை நடுவில் கொண்ட சோமாஃச்கந்தக் காட்சி குறிப்பாகக் கூட இல்லை. சில முதற் பாடல்களிலேயே மங்கை பாகன் என்று மட்டும் பாடியுள்ளனர். மேலும் ஏழு விடங்கங் களையும் அஃதாவது ஏழு திரு ஊர்களையும் பாடியுள்ளார். சுந்தரர் திருக்காறாயில், திருவாய்மூர் இரண்டைப் பாடவில்லை. அப்பர் திருக்காறாயில் தவிர மற்றவற்றைப் பாடியுள்ளார். எந்தப் பதிகத்திலும் இந்த அழகிய விடங்கர் - சிவன், உமை, முருகன் தோன்றும் காட்சி-பாடப்படவேயில்லை. முதல் விடங்கமாகிய திருவாரூர்ப் பதிகங்களிலேயே இல்லை. அப்பர் ஆருரை 23 பதிகங்களில் 232 பாடல்கள் பாடியுள்ளார். எதிலும் எக்குறிப்பும் இல்லை. தியாகராசர் என்னும் குறிப்பும் இல்லை. ஏழு உலகு, ஏழு ഥങ്ങ6), গঞ্জ கடல், ஏழு யுகம் என்றெல்லாம் பாடியோர் ஏழு விடங்கர் பற்றிக் குறிக்கவே இல்லை. -

எனவே, சோமாஃச்கந்தர் கதையும் சிற்பமும் நாகையில் உள்ளன உட்படத் தேவார மூவர் காலத்திற்கு பின் கதையாகப் புகுந்து வடிவம் பெற்றுள்ளன. காயாரோகணம் இல்லை -

இங்கு மற்றொன்றையும் காண வேண்டும். வடபுலத்திலிருந்தும் வந்த பாசுபதத்தார் முதலில் காரோணத்தை உருவாக்கினர் என்று கண்டோம். தொடர்ந்து மன்னர்களால் கோயில் துணையமைப்பு களுடன் பெருக்கம் பெற்றது. இக்காலக் கட்டத்தில்தான் புராணக் கதைகள் வடமொழியிலிருந்து தமிழ்மண்ணில் இறக்குமதி செய்யப்பட்டன. காரோணத்திற்கும் ஒரு வேற்றுக்கதை தோன்றியது. அதுதான் 'காயாரோகணம்' என்பது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/262&oldid=585143" இலிருந்து மீள்விக்கப்பட்டது