பக்கம்:நாகப்பட்டினம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 245

புண்டரீக மாமுனிவர் என்பார் நாகையை வழிபட முனைந்தார். நாகையில் ஒரு சிறு கோயிலை உருவாக்கி வழிபட்டார். அருள் புரிய எழுந்த சிவபெருமான் அவரை உடலுடன் (காயத்துடன்) ஏற்றுக் கொண்டார் (ஆரோகணித்துக் கொண்டார்). அதனால் சிவ பெருமான் அதாவது காரோன ராக இருந்த சிவபெருமான் 'காயா ரோகணர் ஆனார். முனிவர் எடுத்து வழிபட்ட கோயிலும் காயா ரோகணர் கோயில் ஆயிற்று. அது தனிக்கோயிலாக முன்னர் அமைந்த காரோணர் கோயிலுக்கு மேற்கே அமைந்ததால் மேலைக் காயாரோகணம்' எனப்படுகின்றது. அதற்கென ஒரு குளமும் தோன்றி அக்குளம் புண்டரீகுளம் எனப்படுகின்றது. காரோணம் முன் அமைந்த கோயில்; காயாரோகணம் பின் எழுந்த கோயில். ஆயினும், முன்னிருந்த கோயிலுக்கு வழங்கிய காரோணம் என்னும் பெயருடன் காயாரோகணம் என்ற பெயரும் வழக்கில் வந்து காலப்போக்கில் காரோணம் உள்வாங்கிக் கொள்ளக் காயா ரோகணமே வெளிப்பாடாயிற்று. மூலப் பெயர் காரோணம்' என்றும் வழிப்பெயர் காயாரோகணத்தின் மரூஉச் சொல் என்றும் தவறாகக் கொள்ளப்பெற்றது.

தேவார மூவர் 'காயாரோகணரை அறியார். மூவரும் காரோணம் என்றே பாடினர். எனவே, காயாரோகணம் என்ற பெயர் வழக்கும் அதற்காகப் புகுத்தப்பட்ட புராணமும் எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர்த் தோன்றியவை.

இதனால் என்ன குறை? - என்று கருதலாம். "ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ" (1 5) என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கும் போது இந்த இரண்டாவது திருப்பெயரைக் (காயாரோகணம்) கொள்ளக்கூடாதா (?) என்று வினவலாம். கொள்ளலாம். பொருள் வேறுபடாமல் இருந்தால் கொள்ளலாம்; கொள்வதால் உண்மைகள் மறைவதாக இருந்தால் ஏன் கொள்ளவேண்டும்? அத்துடன் இதனால் வேறு நோக்கம் இருக்குமானால் கொள்ளக் கூடாதன்றோ?

சுவை சொட்டும் சொற்கள் - அவை எங்கே?

இப்படிக் கொண்டதால் தேவார மூவர் கொண்ட கருத்தாழம் மிக்க இனிய தமிழ்ப்பெயர்கள் நூற்றளவில் மறைந்தனவே தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/263&oldid=585144" இலிருந்து மீள்விக்கப்பட்டது