பக்கம்:நாகப்பட்டினம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நாகபட்டினம்

பொன் நகைகள், கல்பதித்த அணிகலன்கள், வழிபாட்டிற்குரிய வெள்ளிப் பாண்டங்கள், சீனக் கனகங்கள் (பொன் காசுகள்), 30 காசுகள் முதல் 8000 காசுகள் வரை காசுகள், பல நந்தா விளக்குகள், பாவை விளக்குகள், பயணிகளாக வரும் அடியார்க்கும் கோயில் பார்ப்பனருக்கும் உணவுகள், மாசிமகத்து ஆறாவது நாள் திரு விழாவிற்கு இருப்புகள், பஞ்சாமிர்த முழுக்காட்டலுக்குக் காசுகள், விளக்கு எரிக்க எண்ணெய் முதலிய பல்வகை அறங்கட்கு வழங்கப் பட்ட நல்கைளை இக்கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. இவற்றுள் மேலைக் கடற்கரைக் கொல்லத்து வாணிகரும் கீழை நாட்டாரும் செய்தவை குறிக்கத்தக்கவை. பெரிய ஏப்பம்

இவ்வறங்கள் அனைத்தும் என்ன ஆயின கல்மேல் எழுத்தாக அழியாமல் இருக்கின்றன. நடைமுறையோ நீர்மேல் எழுத்தாகி அழிந்து விட்டது. -

கல்வெட்டு மங்கலச் சொல்லில் தொடங்கும். முடிவு அவ் வறத்தைக் காப்போரைப் போற்றியும் அழிப்போரைத் தூற்றியும் அமைக்கப் பெறும். இதற்கு ஒம்படை என்று பெயர். அறத்தைக் காப் பாற்றுக என்றிருக்கும். காப்பாற்ற வேண்டியோர் ஏப்பம் விட்டனர். "இவ்வறம் காத்தார் அடி எம் முடிமேலன" என்று முடியும். நாம் அறத்தைக் காத்தால் நம் கால் அவர் தலை மேல் ஏற்கப்படுமே; அப்படி நம் காலை வைக்கலாமா என்று கருதிய பெருமனத்துடன் அறக்கட்டளைகளை அடுக்களைச் சாப்பாடாக்கினர்.

அறத்தைக் கெடுத்தோர் தீராப் பழி அடைவர் என்றிருக்கும். பழியைப் பெற்றும் இருக்கலாம். கடவுளையே ஏய்க்க நினைத்தவர் கடவுளர்க்கு ஒரு வழிபாடு நடத்தியே பழியையும் மூடியிருப்பர். முடிவாக எந்த அறமும் இல்லை.

மேலே கண்டவைகள் மட்டுமா? அறங்கள் மேலும் தொடர்ந்தன. மராட்டியர் ஆட்சிக்காலத்தில் "னாகப்பட்டினத்திலேயுள்ள தேவ தாயம் (கோயில் கொடை), விறுமதாயம் (பிரமதாயம்), மானியம் (அறக்கட்டளை), மடப்பிறம் (மடங்களுக்குக்கொடை) முன்பின் அத்துப் பிரகாரம் நடப்பித்துக் கொள்ளுகிறது" (17) என்று பதியப் பட்ட படேவியா வெள்ளிப்பட்டயம் இருக்கிறது அறங்கள் எல்லாம் தாயக்கட்டைகளாக உருண்டுவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/266&oldid=585147" இலிருந்து மீள்விக்கப்பட்டது