பக்கம்:நாகப்பட்டினம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 - நாகபட்டினம்

"கயிலாயமே ஒக்கும் நாகப்பட்டினத் திருநகரம்" என்று பாடிச் சைவசமய மந்திரமாகிய நமசிவாய' என்பது போன்று காயாரோகண(ம்) ஐந்தெழுத்து என்று பெருமைப்படுத்தியுள்ளார். பெற்ற பத்து

பல்வகைச் சிறப்புள்ள நாகைக் காரோணம் பிற ஏதும் பெறாத பத்துச் சிறப்புகளைத் தனக்கெனத் தனிச்சிறப்புகளாகப் பெற்றுள்ளது. அவை:

1. விடங்கர் திருவிடம். . அழகிய விடங்கர்.

கோமேதகக் கல் அருவுருவம் பெற்றிருந்தமை. . அனைத்துக் கடவுளர்க்கும் புகலிடம்.

ஒன்பது கோள்களும் ೯೮೮ಹLDTಹ மேற்கு நோக்கியிருத்தல். முக்தி மண்டபம். காயத்துடன் ஏற்றமை. பிள்ளையவர்களின் சிறந்த புராணம்.

9. அதிபத்த நாயனார் பேறு பெற்றமை - இவற்றாலும் தெருவிற்கொரு கோயில் கொண்டமையாலும்.

10. சைவத் தலைநகர் (சிவராசதானி).

2. சட்டையப்பர் கோயில்

ஒரு முனிவரால் ஒரு காயாரோகணம் தோன்றியது. அவர் புண்டரீக முனிவர். இதுபோல ஒர் உடையாரால் ஒரு சட்டையப்பர் கோயில் தோன்றியது. அவர் சோழிச் சரமுடையார். இச்சட்டையப்பர் கோயில் ஒர் உட்கோயில், ஆம்; மேலைக் காயாரோகனர் கோயிலுக்குள்ளேயே தெற்கு முகமாக அமைந்த கோயில்.

சட்டைநாதர் சிவபெருமானின் சங்கம வகைத் தோற்றம் என்பர். பத்துக் கைகளைக் கொண்டவர். அவற்றில் முத்தலைவேல், உடுக்கை, வாள். தோட்டி (அங்குசம்), மண்டையோடு, பாம்பு, வட்டம், கவர்கயிறு (பாசம்), வளைதடி (தண்டாயுதம்) அருள்குறி எனப் பத்தையும் கொண்டவர்.

ஐந்து திருப்பெயர் கொண்டவர். திருமாலின் உடல் தோலைச் சட்டையாக அணிந்ததால் சட்டையப்பர். அவர் முதுகெலும்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/268&oldid=585149" இலிருந்து மீள்விக்கப்பட்டது