பக்கம்:நாகப்பட்டினம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 25 #

வளைதடியாகக் கொண்டதால் 'தண்டபாணி', எமன் போன்று ஒறுத்ததால் ‘காலவயிரவர். ஆபத்தைக் கெடுப்பதால் ஆபத் தோத்தாரணர்: மணம் கமழும் புழுகை அணிந்ததால் புழுகாணி (புனுகு பூசி ஆள்பவர் என்பதால் புனுகாளி என்றும் கூறுவர்). காளைக்கு மாற்று அரிமா -

இவர் திருமுன் தெற்குமுகமாக அமைந்தது. நந்திக்கு மாற்றாக அரிமா - சிங்கம் படுத்துள்ளது. நரசிங்கத்தை அழித்ததன் அறிகுறி இஃது என்பர். பெருவிழாக் கொடியேற்றத்தில் அரிமா பொறித்த கொடி யேற்றப்படும்.

இக்கோயில் மேலைக் காயாரோகணத்தின் உள்ளேயே அமைந்த அகக் கோயிலாயினும் தனியமைப்புக் கொண்டது. தென்பால் சற்று மேடான கோயில். மாடக்கோயிலுக்குரிய நிறைவான அமைப்புடைய தன்று. இவர்க்குத் தனியே பெருவிழா நிகழும். பங்குனி இறுதிக் கிழமையில் தொடங்கிச் சித்திரை இரண்டாம் கிழமையில் நிறைவுறும். தனித் தேரோட்டம் நிகழும்.

இத்தேரோட்டம் பற்றி ஒரு கருத்தை அறிவது நயம் பொதிந்த தாகும். - வடமும் வடையும்

இக்கோயிலுக்கென அமைந்த நான்கு வீதிகளிலும் தேர் ஒடும். தேரை இழுக்க அக்காலத்து நாகையில் இருந்த புகைவண்டித் தொழி லகத் தொழிலாளர் கூட்டாக வருதல் மரபு. தேரோட்டம் முடிந்ததும் கோயில் பார்ப்பனர் பெருவிருந்துண்பர். ஒராண்டில் தொழி லாளர்கள் வடம் பிடிப்பது நாங்கள், வடை தின்பது பார்ப்பனரா

என்று எதிர்ப்பு காட்டி வடம். பிடிக்கவில்லை. அக்காலத்தில் நாகை

நாட்டுயர்நிலைப் பள்ளியில் பெரும்புலவர் சதாசிவனார் தமிழா சிரியராகப் பணி யாற்றினார். அவர், மறுத்த தொழிலாளர்க்கு வேண்டுகோளாகப் பின்வரும் வெண்பாவை எழுதி அனுப்பினார்;

"மட்டாருஞ் சோலை மலருந் திருநாகைச் சட்டையப்பர் கோயில் தனித்தேரில் - கட்டும் வடம்பிடிக்க வாருங்கள்; வண்கயிலை தன்னில் இடம்பிடிக்க வேண்டுமேல் ஈங்கு". இவ்வேண்டுகோள் வெண்பாவைக் கண்ட தொழிலாளர் புலவர் பெருந்தகைக்கு மதிப்பளித்து வடம் பிடித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/269&oldid=585150" இலிருந்து மீள்விக்கப்பட்டது