பக்கம்:நாகப்பட்டினம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நாகபட்டினம்

இக்கோயில் தோன்றியதற்கு ஒரு வரலாற்றுக் கதை உண்டு. வட புலத்தில் இராமதேவர்' என்னும் சித்தர் காசியில் அமர்ந்து தாம் உரு வாக்கிய சட்டைநாதர் படிமத்தை வழிபாடு செய்து வந்தார். அவர்பால் சோழிச்சரமுடையார் என்னும் மறையவர் அடியவரானார். அவரிடம் இராமதேவர் தம் படிமத்தை வழங்கி இதனை உரிய இடத்தில் நாட்டிக் கோயில் எழுப்புக என்றார். பெற்ற உடையாரின் கனவில் சிவன் தோன்றி இதனை நாகையில் நாட்டுக' என அவ்வாறே நாகைக்குப் படிமத்துடன் வந்தார். கோயில் எழுப்பப் பொருள் இன்றிக் க்வன்றபோது அடுத்துள்ள திருமலைராயன் பட்டினத்தை ஆண்ட திருமலைராயன் என்னும் குறுநில மன்னன் மகளுக்குப் பேய் பிடித்திருப்பதை அறிந்து அதனை நீக்கினார். காணிக்கை செலுத்த விரும்பிய மன்னனிடம் சட்டையப்பருக்குக் கோயில் எழுப்புமாறு வேண்ட அவர் எழுப்பியதே இக் கோயி லாயிற்று. இக்கோயிலின் எதிரே ஒரு பலிபீடம் உள்ளது. அவ்விடம் சோழிச்சரமுடையார் அடக்கமான இடம் என்பர். திருமலைராயன் காலம் 1453 முதல் 1468 வரை. எனவே இக்கோயில் 15 ஆம் நூற் றாண்டில் Tgಿಶಿ சட்டை என்னும் பெயரில் சட்டைமுனிவர் என்னும் ஒரு சித்தர்'இருந்தார். அவர் பாடல்கள் ஆறு. சித்தர் பாடல் களில் உள்ளன.

3. நாகநாதர் கோயில்

ஒரு கோயிலுக்குள் அமைந்த ஒர் உட்கோயில் கண்டோம். கோயிலுக்குள் ஒட்டியுள்ள இணைக் கோயிலையும் கொண்ட ஒரு கோயிலைக் காண்போம். அதுதான் நாகநாதர் கோயில். இக் கோயிலே நாகர்பட்டினத்தை நாக (பாம்பு) பட்டினமாக்கியதன் சின்னம். -

இது சட்டையப்பர் கோயிலுக்கு வடக்கிலும் புண்டரீகுளத்திற்கு மேற்கிலும் அமைந்தது. சுற்றிலும் நான்கு விதிகளைத் தன் பெயரில் கொண்டது. அரச கோபுரம் உடையது. இப்பெயர் பெறுதற்குக் காரணமாக நாகநாட்டரசன் திருவுருவத்தை, திருமுன் செல்லும் நுழைவாயில் வலப்புறச் சுவர் மாடத்தில் வழிபடும் வடிவில் கொண்டது. கருவறையில் நாகநாதர் திருவுருவம் உளது. அம்மன்

(1) தமிழ்ச் சித்தர்களில் இராமதேவர் என்பார் ஒருவர். அவர்பாடிய தமிழ்ப் பாடல்கள் உள்ளன. மேலே கண்ட இராமதேவர் வேறு; இவர் வேறு. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/270&oldid=585151" இலிருந்து மீள்விக்கப்பட்டது