பக்கம்:நாகப்பட்டினம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

☞ເຂມ நாகை 255

கோயில் அரச கோபுர நுழைவாயிலின் மேலே பாவப்பட்டுள்ள பாறைகளில் கல் எழுத்துக்கள் காணப்படுகின்றன. ஒன்றில் சூளாமணி விகாரையின் இராசராசப் பெரும்பள்ளிப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அவ்விகாரை இடிபட்டதன் பின்னர் கட்டப்பெற்ற மண்டபத்தில் அமைக்கப்பட்டதை இது குறிக்கும். புத்தக் கோயில் வழிபாட்டின் ஒரு சான்றுச் சின்னத்தை நாகநாதர் கோயில் கொண்டுள்ளது. - - -

4. மலையப்பர் கோயில்

இதனை மலையீசுவரர் கோயில் என்று வழங்குவர். இப்பெயரே இஃது ஒரு மாடக்கோயில் என்பதனை அறிவிக்கிறது. இது கட்டுமான அமைப்பில் 30 அடி உயரத்தில் கருவறையைக் கொண்டது. கரு வறையிலமைந்த மூலவர் திருவுரு ஒரு புதுமை அமைப்புடையது. பொதுவாக அருவுருவ வடிவம் உருண்டையாக அமைவது. இம்மூலவர் புதுமைப்பாங்காகப் பல்லவர் வடிவமைப்புப் பாங்கில் 32 பட்டை வடிவம் கொண்டது. இஃதொரு சிறப்பு.

அரிமாவினுள் அம்மையப்பர்

மூலவருக்குப் பின்னே யாழித்துண் அமைப்பு உள்ளது. அதில் ஒர் அரிமா அமர்ந்த பாங்கில் உள்ளது. அதன் வயிற்றில் இறைவன் இறைவியுடன் வீற்றிருக்கும் காட்சி அழகியது; சிற்பக் கலையின் சிறப்பை அறிவிப்பது. -

புராணப்படி பராசரர் என்னும் முனிவர் காரோணரை வழிபட வந்து, ஒரிடத்தில் தவக்குடில் அமைத்துச் சிவஅருவத் திருவுருவை நாட்டிப் பல்லாண்டுகள் வழிபட்டார். சிவபெருமான் காட்சி தந்து முனிவர் வேண்டுதலை வினவினார். தாம் அமைத்த குடிற்கோயிலில் கயிலாயத்துடன் அமர வேண்டுமென வேண்ட அவ்வாறே கயிலாய அமைப்பான கட்டுமலைக் கோயிலுடன் இடங்கொண்டார்.

இக்கோயிற் பணியில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆலந்துக்காரரின் ஆட்சி இறுதிக் காலத்தில் இருந்த ஆளுநர் உதவியால் இக்கோயில் திருப்பணி நிகழ்ந்ததாகும். கிறித்துவ சமயச் சார்பான ஆலந்து ஆளுநர் இப்பணியைச் செய்வித்து இக்கோயிலில் தமிழ்க் கல்வெட்டு ஒன்றையும் நுழைவாயில் இடப்பக்கம் வைக்கச் செய்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/273&oldid=585154" இலிருந்து மீள்விக்கப்பட்டது