பக்கம்:நாகப்பட்டினம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நாகபட்டினம்

அதில், -

"இக்கோயில் 1777ஆம் வருடம் புகழத்தக்க கவர்னர் நெயினியர் வான் விளிசிங்கன் பிரபு காலத்தில் புதுப்பிக்கப்பட்டது" என்றுள்ளது. இவர்தாம் ஆலந்தின் இறுதி ஆளுநராவார். -

ஆளுநரின் தாய் மொழியாம் டச்சு மொழியிலும் ஒரு கல்வெட்டு வலத்திருச்சுற்றின் வெளிப்புறச் சுவரில் உள்ளது. இம்மலையப்பர் கோயில் நீலா தெற்குவீதியிலிருந்து காரோணர் கோயிலுக்குச் செல்லும் வழியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இஃது ஒன்றே நாகையில் மாடக் கோயிலாகும். -

5. நடுவர் கோயில்

நடுவர் கோயில் என்னும் பெயர் சில கருத்துக்களைத் தருகின்றது. நகருக்கு நடுவே அமைந்த கோயில் என்பது முதல் கருத்து. இது கொண்டு இக்கோயில் எழுந்த காலத்தில் நகரமைப்பு. எந்த அளவில் இருந்திருக்கும் என்று அறிய இயலும். வெளிப் பாளையத்தை விடுத்து நாகை அகநகர் என்று பார்ப்பினும் இக் கோயில் சரியளவில் நடுவாக இல்லை. ஒரளவே நடு இடமாகும். இது கொண்டு வெளிப்பாளையம் தோன்றுவதற்கு முன்னரே இக்கோயில் எழுந்திருக்கலாம் என்று கொள்ள இடம் உண்டு. இவ்வகையில் இது தொன்மை வாய்ந்த கோயிலாகும். உலகப் படைப்பிடம்

புராணக் கதையில் ஊழிக் கால உலக அழிவிற்குப் பின்னர் நான்முகன் உலகைப் படைக்கச் சிவபெருமான் அருளின்படி இக் கோயிலை அமைத்து வழிபட்டான் என்றுள்ளது. நான்முகன் பெய ால் இக்கோயிலின் பின்னே பிரமதீர்த்தம் உள்ளது. இராமனும் ாமனும் இதனை வழிபட்டனர்; அருள் பெற்றனர் என்பர்.

இதன் கருவறையில் ஒரு நிலவறை உண்டு. திருமுன்தெரு அகல மானது. தெற்கில் மட்டும் ஒரு மடவளாகத் தெருவைக் கொண்டது.

இதனை வடமொழியார் "நடுத்தலேசம்" என்றும் இறைவனை "மத்தியத்தலேசர்" என்றும் இக்கோயிலின் முன்னமைந்துள்ள பிள்ளையாரை "மத்தியத்தலேச விநாயகர்" என்றும் ஆக்கினர்.

இராசகோபுரமும், நுழைந்த சிறு வெளியில் தெற்குப் பார்த்த ஒரு கொலுமண்டபமும், ஓரளவான மாமண்டபமும், அம்மன் திருமுன்னும், உள்ளாழி மண்டபமும் கொண்டது இக்கோயில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/274&oldid=585155" இலிருந்து மீள்விக்கப்பட்டது